பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அம்மையும் அப்பனும் வரையில் அமைந்த ஒன்று என்பதையும் விளக்குகிறார். இவ்வாறாய ஆன்மாவைப் பற்றி எப்படி நாம் சில நிமிடங்களில் அறுதியிட்டுக் காண முடியும்? எனினும் இச்சீவனைச் சிவனே ஆட்டுவிக்கின்றான் என்பது உண்மை. இதைத்தான் எல்லாச் சமயங்களும் சொல்லு கின்றன. சைவசித்தாந்திகளும் சீவன், சிவனொடு சார்ந் தால் செயலற்று ஒன்றாகும் நிலையினையும், தனக்கென ஒன்றில்லை என உணர்ந்தால் அச்சீவனுக்கு நலக்கேடு ஒன்றும் இல்லை என்ற உண்மையினையும் கூறுவர் 'நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று மணிவாசகரும், அருவினை பாசக் கயிற்றின் வழி ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டேதில்லை அம்பலத்தே' என்று அப்பரும், 'என்செயலாவது யாதொன்று மில்லை' என்றும் 'ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே' என்றும் பல வகையில் இவ்வுண்மையை விளக்கியுள்ளனர். வேதாந்திகளோ இந்த உயிர் வாழ்வினை வேறு வகையில் கூறுவர். ஒரே பழு மரத்தில் இரு குருவிகள் அமர்ந்துள் ளன. ஒன்று அமைதியாக இருக்க, மற்றொன்று கிளை தொறும் தாவிப் பழம் பறித்துண்டு, நோயுற்று வருந்திப் பின் தெளிவுறுகின்றது. இதில் முன்னது பரமாத்மா என்றும் பின்னது ஜீவாத்மா என்றும் கூறுவர். இவ்வுயிர் நாம் முதலில் கண்டபடி தான் செய்த வினையின்படியே