பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
13
 


உடனே நடிகர் பொகார்ட், தன் மனைவியிடம், "நான் நடித்திருக்கும் படம் நல்ல வெற்றியைத் தரும்” என்று சொன்னார்.

"அதெப்படி அவ்வளவு நிச்சயமாகச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள் நடிகை பகால், - -

"பட அதிபர் கோஹன்,' நமது படம்' என்று அதை இப்பொழுது என்னிடம் குறிப்பிட்டார். அது வெற்றிகரமான படம் அல்லவென்றால், இப்படிக் குறிப்பிடாமல் உன் படம் என்று அல்லவா குறிப்பிட்டிருப்பார் என்றார் நடிகர்.(11) ங்கிலம் தெரியாத ன்னர்


இங்கிலாந்து மன்னராக இருந்த முதலாம் ஜார்ஜ் மன்னருக்கு ஆங்கிலமே தெரியாது. அவர் ஜெர்மனியில் பிறந்தவர். ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட அவருக்குப் பேசத் தெரியாது. -


(12) வர் ருவரே புத்திசாலி


பிரிட்டிஷ் பிரதம மந்திரியாயிருந்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு ஒரு மருமகன் இருந்தார். அவர் ஒரு நடிகர். அவரோடு ஏதோ மனவருத்தம் காரணமாக சர்ச்சில் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை.