பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

19


இவ்வாறு பலர் பொது, மேடையில் அறிவித்து பத்திரிகையில் விளம்பரம், புகழ் தேடிக் கொள்வார்கள். பிறகு பேச்சே இருக்காது.


(19) ண்டு ளிப்புறும் சை


பல வண்ணங்கள் மிளிர, அற்புதமான, சூரியன் மறையும் காட்சியைச் சித்திரம் தீட்டியிருந்தார் ஓவியர் டர்னர்.

அந்தச் சித்திரக் காட்சியைக் கண்ட ஒரு சீமாட்டி, "ஓவியக் கலைஞரே, இம்மாதிரி வண்ணங்களில், கதிரவன் மறையும் காட்சியை நான் கண்டதில்லையே” என்றார்.

“சீமாட்டி அவர்களே, நீங்கள் கண்டிருக்க வேண்டியதில்லை; அப்படிக் கண்டுகளிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசையாக இல்லையா?” என்று பதில் அளித்தார் அந்த ஓவியக் கலைஞர். .


(20) விருந்தை றந்தவர்


பிரிட்டிஷ் கண்காட்சிசாலையின் பொறுப்பாளர் ஒருவர், தம்முடைய நண்பர்களுக்கெல்லாம் விருந்து அளிக்க வேண்டும் என்று விரும்பினார்.