பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


20
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


குறிப்பிட்ட நாளில், ஒரு உணவு விடுதிக்கு வந்து சேருமாறு எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த விடுதியில் தகுந்த ஏற்பாடுகளை முன்னதாகவே செய்திருந்தார்.

ஆனால், நண்பர்களை வரவேற்பதற்கு, குறிப்பிட்ட நாளுக்கு மறுநாள் அவர் போய்ச்சேர்ந்தார். ஞாபகமறதி. அவர் என்ன செய்வார், பாவம் !


(21) ண்பர் ளித்த தவிபிரெஞ்சு நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ், நாவல் எழுதுவதில் புது முறையைக் கையாண்டவர்.

அவருக்கு மோக்வெட் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். அவர் நாவலின் அடிப்படை அமைப்பை டூமாஸிடம் கூறுவார். டூமாஸ் அதை விரிவுபடுத்தி எழுதிக் கொண்டே போவார்.

“நண்பர் மோக்வெட்டின் உதவியோடுதான் என் இலக்கியம் வளர்ந்தது”என்று டூமாஸ் நன்றியோடுகூறுகிறார். “என் நண்பர் கதை கூறினார்; நான் எழுதினேன்” என்று பெருமை கொள்கிறார் அந்தப் பிரபல ஆசிரியர்.

பிறருடைய கூட்டுறவில் தன் நாவல் பிறந்ததை, டூமாஸ் கண்ணியக் குறைவாகக் கருதவே இல்லை.