பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(22) பூச் செருகும் ழக்கம்


இளவரசர் ஆல்பர்ட், விக்டோரியா மகாராணியை மணந்து கொள்வதற்காக முதன் முதலில் பிரிட்டனுக்கு வந்து சேர்ந்ததும், அவருக்கு மகாராணி பூச் செண்டு ஒன்றைக் கொடுத்தார். -

ஆல்பர்ட் மிகவும் இங்கிதம் தெரிந்தவர். பூச் செண்டிலிருந்து ஒரு பூவை எடுத்து தன்னுடைய கோட்டின் காலரின் மடிப்பில் துவாரம் இட்டு அந்தப் பூவைச் செருகிக் கொண்டார்.

அதிலிருந்து எல்லோருமே தங்கள் கோட்டில் பூச் செருகும் துவாரம் போட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.



(23) ந்தை செய்த தவி


ஆல்பர்ட் ஹிச்காக், 'சஸ்பென்ஸ்' வைத்துப் படம் எடுப்பதில் நிபுணர் என்பது உலகம் அறியும்.

அவருடைய ஏழாவது வயதிலே, அவருடைய தந்தை, அவருக்கு ஏற்படுத்திய பெரிய சஸ்பென்ஸ்' மறக்க முடியாதது.

அவர் கூறுகிறார்:

“எனக்கு வயது அப்பொழுது ஏழு. என் தந்தை என்னிடம் ஒரு நாள் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு