பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
23
 


(24) ணமா? குழந்தையா?


சினிமா நடிகை ஜெனி டீர்னியிடம் அவருடைய தோழி, "உனக்குப் பத்தாயிரம் டாலர்கள் பணம் அல்லது பத்துக் குழந்தைகள் கிடைக்கும் என்றால், இரண்டில் நீ எதை விருமபுவாய்?” என்று கேட்டார்.

பத்து குழந்தைகளைத்தான்!” என்று உடனே பதில் அளித்தார் நடிகை. "ஏனென்றால் பத்தாயிரம் டாலரைப் பெற்ற பின்ன்ரும் மேலும் மேலும் பண ஆசை அதிகரித்துக் கொண்டே போகும் பத்துக் குழந்தைகளைப் பெற்றாலோ போதும் போதும் என்றாகிவிடும்” என்ற காரணமும் கூறினார் நடிகை.

பெரும்பாலோர் பணத்தையே விரும்புவார்கள்!


(25) புரட்சியால் பெற்ற தவிஅயர்லாந்து நாட்டிலே 1848ம் ஆண்டில், பெரும் புரட்சி செய்த இளைஞர்கள் மீது ராஜத்துரோக வழக்கு நடைபெற்றது.

அவர்கள் ஒன்பது இளைஞர்கள், அவர்களின் தலைவனின் பெயர் சார்லஸ் டபி.

அந்த ஒன்பது பேர்களுடைய வழக்கை விசாரணை செய்த நீதிபதி, தண்டனை அளிப்பதற்கு முன், குற்றவாளிகளைப் பார்த்து, “நீங்கள் ஏதாவது சொல்லிக் கொள்ள விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.