பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


டயமண்டுக்கு நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது.

புத்திசாலித்தனம் எப்பொழுதும் வெற்றி பெறும்.


(27) திர்பாராத ரிசுத்தொகை


நியூயார்க் குதிரைப் பந்தயத்தில் ஒருவன் இரண்டு டிக்கட்டுகள் வாங்கியிருந்தான்.

அந்தப் பந்தயம் முடிந்ததும் தான் கட்டிய நம்பருக்குள்ள குதிரை வெற்றி பெறவில்லை. ஆகையால், தன் பையிலிருந்த டிக்கட்டுகளை வெறுப்போடு கிழித்து எறியப் போனான். அதற்குள் அந்த டிக்கட்டுகளை ஒரு முறை பார்த்தான்.

அவை தான் நினைத்து வாங்கிய நம்பர்கள் இல்லை என்றும், தவறுதலாக தனக்கு வேறு நம்பர்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், தெரிய வந்தது. அந்த நம்பர்களை ஒரு முறை ஞாபகப்படுத்திப் பார்த்தபோது, அவை வெற்றி பெற்ற கரைகளுக்கான நம்பர்களாக இருந்தன. அவற்றைக் கொண்டு போய்க் கொடுத்த போது அன்றையப் பந்தயத்தில் அடித்த பெரிய பரிசு 5000 பவுன்கள் அவனுக்குக் கிடைத்தன.


(28) புதுமையான மூங்கில் திரை


ரஷ்யா என்றதும் 'இரும்புத் திரை' என்ற சொல் நமக்கு, இயல்பாகத் தெரியும். -