பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


38
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


“பசி காரணமாக என் மூளை தீவிரமாக வேலை செய்தது. ஒரு வழி தோன்றியது. மறுநாள் காலை, வெள்ளையர் ஹோட்டலுக்குள் சென்று, "எனக்கு ஏதாவது சாப்பிடத் தாருங்கள்” என்று தமிழிலே கேட்டேன். - -

நான் சொன்னது அங்கே இருந்த எவருக்குமே புரியவில்லை. ஆகவே, என்னை அயல்நாட்டார் என்று தெரிந்து கொண்டனர். என்னை வெளியே போகச் சொல்லாமல் உணவு பரிமாறினார்கள். அந்த நகரில், அந்த ஹோட்டலிலேயே தங்கினேன்.” .(41) ரியும் ர்ண விளக்கமும்அமெரிக்கர் ஒருவர், ஹாலந்து நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரிடம், “உங்கள் நாட்டு தேசியக் கொடி எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.

“அதில் சிவப்பு வெள்ளை, நீலம் ஆகிய மூன்று நிறப் பட்டைகள் இருக்கும். எங்கள் நாட்டின் வரிகளைக் குறிப்பிடவே அந்த நிறங்களை ஏற்படுத்தியுள்ளனர்” என்று எண்ணுகிறேன்.

அதாவது வரி அறிவிப்பு வந்ததும், எங்கள் முகம் சிவந்து விடும் வரியைச் செலுத்தத் தொடங்கினால் எங்கள் உடல் வெளுத்து விடும்; வரி முழுவதையும் செலுத்தி முடித்தோமானால், நாங்கள் செத்துச் சவமாகி நீலம் பாரித்து விடுவோம்” என்று விளக்கிக் கூறினார் ஹாலந்து நாட்டுக்காரர்.