பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


முடிவு செய்து, அவரை வெளியே தூக்கி விடாமலேயே போய்விட்டார்.

சிறிது நேரத்தில், அவ்வழியே சென்ற பொது மக்களில் சிலர் கிழவரை வெளியே தூக்கி விட்டதோடு, இரக்கம் இல்லாமல் நடந்து கொண்ட சீடரான தத்துவ அறிஞரை கண்டித்தனர்.

ஆனால், குழியில் விழுந்த கிழ ஆசிரியரோ, தாம் கற்றுக் கொடுத்த கொள்கைப்படியே தம்முடைய சீடர் நடந்து கொண்டதற்காக அவன்ரப் பாராட்டி மகிழ்ந்தார்.(43) தைப்பிறகு பார்த்துக்கொள்ளலாம்பல அற்புதங்களைக் கண்டுபிடித்தவர் அமெரிக்க மேதை தாமஸ் எடிசன்.

அவருடைய 55வது வயது பிறந்த நாளைக் கொண்டாடப் பல பிரமுகர்கள் விருந்து உபசாரம் நடத்தினார்கள்.

அப்பொழுதுஎடிசனைப்பார்த்து,

இனிமேல், நீங்கள் என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

'75வது வயது வரை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பேன். 80வது வயதில் பெண்களோடு ஏதாவது வம்பளந்து கொண்டிருப்பேன்; 85 வது வயதில் கோல்ப் விளையாடக் கற்றுக் கொள்ளப்போகிறேன்” என்று கூறினார் எடிசன்.