பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


இன்னொரு உறுப்பினர், "இரவல்-குத்தகை இனத்துக்கு 60 லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன்” என்றார்.

அந்தச் சமயத்தில் சபையில் ஏதோ கலவரம் திடீரென்று உண்டாயிற்று.

அது என்ன? உறுப்பினர் ஒருவர் போட்ட கூச்சல் காதில் விழுந்தது.

“என்னுடைய நிக்கல் நாணயம் ஒன்று கீழே விழுந்து விட்டது. அது என் கைக்கு அகப்படுகிறவரைக்கும், எவருமே இந்த மன்றத்தை விட்டு நகரக் கூடாது" என்பதே அந்தக் கூச்சல்!(46) தோற்றமும் குதியும்இளம் ஓவியர் ஒருவர் மாவீரன் நெப்போலியனைப் பேட்டி காணச் சென்றார். - -

ஏழ்மையில் வாடி, கந்தலும் கிழிசலுமான உடை அணிந்திருந்த அந்த ஒவியருக்கு சிறிது அருவருப்புடனேயே நெப்போலியன் பேட்டி அளித்தார். ஆனால் ஒவியர் அறிவும், பண்பும், கலைத்திறனும் உடைய சிறந்த கலைஞர் என்பதைப் பேசிக் கொண்டிருக்கையிலேயே புரிந்து கொண்டார் நெப்போலியன்.

பேட்டி முடிந்து ஒவியர் எழுந்தார். நெப்போலியனும் அவருடனேயே எழுந்தார். ஒவியர் விடைபெற்றுக் கொண்டு