பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
43
 


வாயிலை நோக்கிச் சென்றார். நெப்போலியனும் அவருடன் வாசல் வரை சென்று வழியனுப்பினார். -

முதலில் அருவருப்புக் காட்டியவர், பிறகு இவ்வளவு பரிவு காட்டியதைக் கண்ட ஒவியர் வியப்புற்றதோடு அதை நெப்போலியனிடமே கூறியும் விட்டார்.

மாவீரர் அமைதியாக, "ஓவியக் கலைஞரே, முன்பின் தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய வெளித் தோற்றத்துக்கு ஏற்ற வரவேற்பு, ஆனால், பழகிப் பிரியும்போது அவரவர் தகுதிக்கு ஏற்ப விடை கொடுக்கிறோம்” என்று கூறினார்.(47) புத்தகங்களினால் ண்டாகும் ன்மைபிரபல நகைச் சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் வீட்டுக்குக் கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் நண்பர் ஒருவர் வந்தார். அவரும் ஒரு நூல் ஆசிரியரே. -

ட்வைனின் புத்தக அறைக்குள் நுழைந்தபோது, தரையில் ஏராளமான புத்தகங்கள் அடுக்கடுக்காக வைத்திருப்பதைக் கண்டார். -

“இவை எல்லாம் உங்களுக்கு வந்த கிறிஸ்துமஸ் பரிசுகளா?"என்று நண்பர் கேட்டார்.

"ஆமாம்” என்று தலையசைத்தார் ட்வைன்.