பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


44
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


"நமக்குப் புத்தகங்களையே பரிசு அளிக்கிறார்களே, ஏன்? புத்தகங்களைத் தவிர வேறு ஒன்றும் நமக்குத் தேவை இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா?" என்று நண்பர் கேட்டார். .

"இருக்கலாம்; அதனால் என்ன? புத்தகங்கள் என்றாலே எனக்குப் பிரியம் அதிகம். உதாரணமாக, இதோ இந்தக் கனமான புத்தகங்களைப் பாருங்கள்! பூனைகள் மீது விட்டெறிய இவற்றை விடச் சிறந்த பொருள் வேறு கிடைக்காது. சிறிய புத்தகங்களை மேஜை, நாற்காலிகளின் கால்களுக்கு அடியில் வைத்தால் அவை ஆடி அசையாமல் இருக்கும். இதோ இருக்கிறதே தோல் பைண்டு செய்த புத்தகம், இதிலே சவரக் கத்தியைச் சுகமாகத் தீட்டலாம். ஆகையால்,புத்தகம் அருமையான பொருள். அவற்றையாரும் எனக்கு நிறையத் தாமாட்டேன் என்கிறார்களே. அது தான் என் மனக்குறை” என்றார் ட்வைன்.(48) ங்கே போகலாமா?


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நிகழ்வதற்கு முன்பு, வெண்டல் பிலிப்ஸ் என்ற சீர்திருத்தவாதி ஒருவர் இருந்தார்.

அவர் நாடெங்கும் சுற்றி நீக்ரோக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு சொற்பொழிவு நிகழ்த்தி வந்தார்.

ஒகியோ மாநிலத்தில் பாதிரிகள் சிலர் வந்து சீர்திருத்தவாதியைச் சந்தித்தனர்.