பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்



அன்று இரவு, வழக்கம் போல் பதிப்பாளர் நினைவுக்குறிப்புகளை எல்லாம் எடுத்து ஆராய்ந்த போது, 'டிங்கிள்ஸ் பீல்' துணுக்குக் காணப்பட்டது. இதை எதற்காகக் குறித்தோம் என்று வெகுநேரம் யோசித்து யோசித்துப் பார்த்தார். எவ்வளவு நேரம் கண் விழித்தும் ஒன்றும் புரியவில்லை. தூக்கமும் பிடிக்கவில்லை. அந்த வாரம் முழுவதும் இதே சிந்தனைதான்.

அலுவலகத்துக்குப் போனால் அங்கேயும் ஆழ்ந்த சிந்தனையோடு டிங்கிள்ஸ் பீல்' என்று தனக்குள் உருப்போட்டுக் கொண்டே அங்கும் இங்கும் உலாவுவார். 'டிங்கிள்ஸ் பீல்' தலைவலி தீர்ந்த பாடில்லை. -

ஒரு வாரம் ஓடியது. இனி, 'இந்த ஞானத்துணுக்கு நமக்கு வேண்டாம். எக்கேடும் கெட்டுப் போகட்டும். இதனால் பைத்தியம் பிடிக்காமல் தப்பித்துக் கொண்டால் போதும்' என்று தீர்மானித்து 'டிங்கிள்ஸ் பீல்' அடியோடு விட்டு ஒழித்தார் பதிப்பாளர்.



(59) வர் ங்கே போகிறார்?



ட்வைட் மாரோ என்பவர் அமெரிக்காவில் பிரபலமான சட்ட நிபுணர். ஆனால், அவருக்கு ஞாபகமறதி சற்று அதிகம்.

ஒரு நாள், சட்ட நிபுணர் ரயிலில் அமர்ந்து, புத்தகத்தைப் படிப்பதில் ஆழ்ந்து விட்டார். -