பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
55
 


டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட் கேட்டபோது தான் சட்ட நிபுணர் பரபரப்போடு சட்டைப் பையில் டிக்கட்டைத் துழாவினார். ஆனால் அகப்படவில்லை.

அவரைப் பரிசோதகர் அறிந்தவராகையால் "பரவாயில்லை; டிக்கட் கிடைத்ததும் பிறகு அதை தபாலில் அனுப்பினால் போதும்” என்று கூறினார்.

டிக்கட் வாங்கினேன், அது எனக்கு நன்றாக நினைவு. இருக்கிறது. ஆனால், நான் எங்கே போகிறேன் என்பதுதான் இப்போது மறந்துபோய்விட்டது. டிக்கெட் அகப்பட்டால்தானே இதை நான் தெரிந்து கொள்ள முடியும்” என்றாராம் அந்தச் சட்ட நிபுணர்.(60) சு காட்டிய பாதைஅமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டன் என்னும் தீவில், ஹட்ஸன் நதிக்கரையில் குன்று ஒன்றில், பெரிய மாளிகை ஒன்றைக் கட்டினார் கோடீசுவரர் ஒருவர்.

செங்குத்தான அந்தக் குன்று கரடுமுரடானது. உச்சியில் இருக்கும் மாளிகைக்கு எந்த வழியாகப் பாதை அமைப்பது என்று புரியாமல் திகைப்புற்றார் கோடீசுவரர். அதற்கு தம் நண்பர் ஒருவரிடம் யோசனை கேட்டார்.

“அது என்ன பிரமாதம்! ஒரு பசுவைப் பிடியுங்கள் அது உதவி செய்யும்” என்றார் நண்பர்.