பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


58
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


'அதற்கு நான் சாட்சி' என்றார் மற்றொரு நண்பர்.

கர்னல் ஒரு கனவான் அல்லவா? பந்தயத்துக்கு ஒப்புக் கொண்டார்.

மறுநாள் காலையில், பந்தயம் கட்டியவரும் சாட்சியும் கர்னல் வீட்டுக்குச் சென்று, கர்னல் இருக்கிறாரா?” என்று கேட்டனர்.

"இல்லீங்களே, அவர் இப்பத்தான் வாஷிங்டன் நகரிலிருந்து டெலிபோன் செய்தார். ஏதோ அரசு அலுவலாக அங்கே போயிருக்கிறார்” என்றான் வேலையாள்.

“என்ன? இதற்குள் அங்கே போயிருக்க முடியாது, எந்த ரயிலும் இவ்வளவு விரைவில் போயிருக்க முடியாதே" என்றார் பந்தயம் கட்டியவர்.

"இல்லிங்க, அவர் ரயிலில் போகவில்லையாம், குதிரையிலே சவாரி செய்தபடியே போய்விட்டாராம்” என்று அமைதியாகப் பதில் சொன்னான் வேலையாள்.

பந்தயம் என்ன ஆயிற்று?(63) குழந்தைகளின் குழப்பம்நியூயார்க் நகரில் சின்னஞ்சிறு குழந்தைகள் படிக்கும் ஒரு நர்சரிப் பள்ளிக்கூடம். பள்ளி நேரம் முடிந்தபின்னர், மாலை வேளையில், சில பஸ்கள் வந்து நிற்கும்.