பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
(1) விஞ்ஞானியின் பேச்சுகொலம்பியாவில், சிறப்பு வாய்ந்த இலக்கிய அறிஞர் டாக்டர் பிராங்க், பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனைக் கெளரவிப்பதற்காக தேநீர் விருந்து அளித்தார்.

விருந்துக்குப் பிறகு எல்லோரும் பிரதம விருந்தினர் ஐன்ஸ்டீனை பேசும்படி கேட்டுக்கொண்டார்கள்.

அவர் எழுந்து நின்றார். -

“நண்பர்களே! உங்களிடம் பேசுவதற்கு இப்பொழுது என்னிடம் ஒரு விஷயமும் இல்லையே” என்றார்.

இப்படிக் கூறிவிட்டு அவர் உட்கார்ந்ததும் எல்லோருக்கும் அதிருப்தியா இருந்தது. அதைக் கவனித்தார் ஐன்ஸ்டீன். மறுபடியும் எழுந்து நின்றார். -

“நண்பர்களே, என்னை மன்னிக்க வேண்டும். பேசுவதற்கு விஷயம் கிடைத்து விட்டால், நானே உங்களிடம் வந்து விடுவேன்” என்றார்.

ஆறு ஆண்டுகள் கழிந்தன. டாக்டர் பிராங்குக்கு, ஐன்ஸ்டீனிடமிருந்து தந்தி வந்தது. “தம்பி, இப்பொழுது எனக்கு பேசுவதற்கு விஷயம் கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.