பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
59
 


குழந்தைகளோ எந்தப் பஸ்ஸில் ஏறுவது என்று புரியாமல் தவித்தனர்.

அதை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர், ஒரு பஸ்ஸுக்கு முயல், மற்றொன்றுக்குக் கோழிக் குஞ்சு இன்னொன்றுக்குக் கரடி, இவ்வாறு பல சித்திரங்களை வரைந்து பஸ்ஸில் பொருத்தி விட்டனர். அதன்பின்னர் குழந்தைகள் குழப்பம் இல்லாமல் பஸ்ஸில் ஏறிச் சென்றனர்.(64) ருமானம் ன் குறைகிறது?ஜெர்மனியின் பெரும்பகுதிக்கு பிரஷ்யா என்பது அக்காலத்தில் பெயராக இருந்தது. அதற்கு அரசராக இருந்தவர் மகா பிரெடரிக் என்பவர்.

அரசர் பிரெடரிக், ஒரு சமயம் தம்முடைய அமைச்சர்களையும், பிரபுக்களையும், தளபதிகளையும் அழைத்து விருந்து அளித்தார். :

விருந்து முடிந்தபின், அரசர், பல வகையான வரிகளை விதித்து வசூலிக்கிறோம். அவ்வாறு இருந்தும் வருமானம் ஏன் குறைந்து கொண்டே போகிறது? அதன் காரணம் என்ன?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்.

அனுபவம் மிக்க தளபதி எழுந்து "மேன்மை பொருந்திய மன்னர்பிரானே, அது எப்படி என்பதை இதோ உங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறி விட்டு, பெரிய பனிக்கட்டி ஒன்றை தம் கையில் எடுத்துச் சிறிது திருப்பிப் பார்த்தார்; பிறகு