பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
67
 


"தேயிலை வண்டிகள் எல்லாவிதத்திலும் சிறப்பாய் அமைந்திருந்தது”

'இராணுவ வீரர்கள் மிகவும் கடுமையாக வேலை செய்ய வேண்டியதிருந்தது. அப்பொழுது வேறு எதையும் விட ஒரு கோப்பை தேநீரே அவர்களுக்கு ஆனந்தம் அளித்தது.”

“எங்குமே பரவியிருந்த தேயிலைப் பானம் தயாரிப்பதற்காக அங்கே ஒரு கெட்டில் தயாராகக் கிடந்தது.”

இப்படியாக, ஒவ்வொரு செய்திக்கு, ஏதாவது ஒரு வசனம் பரவலாகக் காணப்பட்டது.

இதைக் கண்டு தணிக்கை அதிகாரிகள் இதன் மர்மம் என்னவோ என்று மலைத்துப் போனார்கள். -

தீர விசாரித்து அறிந்த பின்னர், அந்த நிருபர், சர்வதேச தேயிலைச் சங்கத்தின் பிரதிநிதி என்பது பிறகு தெரியவந்தது.(74) ருநாள் ருமானம் போதும்


போர்க் கருவி உற்பத்தியாளரான நோபெள் பிரபுவிடம் ஒரு வேலைக்காரி இருந்தாள்.

ஒரு நாள் அந்த வேலைக்காரி பிரபுவை அணுகி, தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தாள்.

உடனே அவளிடம், "என்னிடமிருந்து என்ன சன்மானத்தை நீ விரும்புகிறாய்?” எனக் கேட்டார்.