பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்


“உங்களிடமிருந்து நான் விரும்புவது எனக்குக் கைக்கெட்டாததாகத் தோன்றுகிறது” என அச்சத்தோடு கூறலானாள்.

"தைரியமாகக் கேள், நீ கேட்பதைத் தருகிறேன்” என்று ஊக்கமூட்டினார் அவர்.

"பிரபுவே, உங்களிடமிருந்து நான் விரும்புவது... உங்களுடைய ஒரு நாள் வருமானத்தையே” என தயக்கத்தோடு கூறினாள் அந்த வேலைக்காரி.

சிறிதும் தாமதியாமல், வேலைக்காரி பெயருக்கு ஒரு செக் எழுதிக் கொடுத்தார் பிரபு.

செக் தொகை எவ்வளவு?

ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய்!



(75) ளிகைக் டைக்காரரின் பேருதவி


நாடகம் எழுதும் ஆவல் உள்ளத்திலே சுரந்தது. அதை இலட்சியமாக, வாழ்க்கையின் பலனாக, பொழுது போக்காக அவர் இரவு பகலாக பல நாடகங்களை எழுதிக் குவித்தார்.

ஒவ்வொரு நாடகமும் அவருக்கு இனிமையாகவும், படிக்கப் படிக்கச் சுவையாகவும் இருந்தது. ஆனால், எல்லாம் அவருக்குத்தான்.

அவர் படைத்த கதாநாயகர்களுடன் அவர் மனதாலும் வாயாலும் பேசிக்கொண்டார். -