பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


78
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.

"அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே, உங்களுக்கு விஷயம் தெரியுமோ? கிறிஸ்துவ மதத்தை நான் விட்டு விட்டேன். இப்படிக்கு, ஜார்ஜ் மூர்.”

அதற்கு உடனே பதில் கடிதமும் அவருக்கு வந்தது.

"அன்புள்ள ஜார்ஜ் மூர், ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? பசுவே, நான் போய் வருகிறேன் என்று கூறியதாம் ஈ; அப்பொழுது, பசு தன் வால் பக்கம் திரும்பி, நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்தது எனக்குத் தெரியாதே என்று பதில் சொல்லியதாம்.”இப்படிக்கு டப்ளின் நகர ஆர்ச் பிஷப்.(85) திருட்டுக் தைஅமெரிக்கக் கதாசிரியர் சார்லஸ் வான் லோன் பல ஆண்டுகளாக சிறிய பத்திரிகைகளுக்கே எழுதி வந்தார்.

பெரிய பத்திரிகைகள், அவருடைய கதைகளைப் பிரசுரிக்கவே இல்லை.

ஒரு சமயம், அவருடைய கதையை, வேறு ஒருவர் திருடி, 'தி ஸாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்' என்ற பிரபல பத்திரிகைக்கு அனுப்பி விட்டார். அந்தக் கதையும் பிரமாதமாக வெளிவந்து விட்டது.