பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
81
 


வேலையாள் டாக்டரிடம் போய்விட்டு முகவாட்டத்தோடு திரும்பி வந்தான்.

“டாக்டர் என்ன சொன்னார்?' என்று கேட்டார் மளிகைக் கடைக்காரர்.

வேலையாள் சலிப்போடு, "அவர் என்னத்தைச் சொன்னார்? எனக்கு உடல்நலம் இல்லையாம்; என் நாக்கை நீட்டச் சொன்னார். நாலைந்து வாரம் ஒடியாடி வேலை செய்யாதே; ஒய்வாக வீட்டிலே படுத்திரு, அப்போதுதான் உன் உடல் நலம் அடையும் என்று எச்சரித்தார்” என்று கூறி முடித்தான் வேலையாள்.(88) விஞ்ஞானிகளை ம்பலாமா?"பெண்கள் முகத்தில் பூசிக் கொள்ளும் கிரீம், தசையைத் தின்று முகத்தில் குழி விழச் செய்கிறது” இப்படி ஒரு வதந்தி அமெரிக்காவில் ஒரு சமயம் பரவியது.

அதை அறிந்த விஞ்ஞானிகள் சிலர் உட்னே பரிசோதனை செய்யலானார்கள்.

சோதனைக்காக ஏழு முயல்களைக் கொண்டு.அவற்றின் முகத்தில் சோப்பைத் தடவி, தாடியைச் சிரைத்து, பிறகு, உயர்ந்த ரக கிரீமை முகத்தில் நன்றாகப் பூசினர்.

சில மணி நேரத்துக்குப் பிறகு, முயல்களின் முகத்தை நன்றாகக் கழுவிச் சோதித்தனர். கிரீமால் முயல்களுக்கு ஒரு கெடுதியும் உண்டாகவில்லை என்பது தெரியவந்தது.