பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


84
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பல நாட்கள் மருத்துவம் பார்த்தும் அவன் குணம் பெறவில்லை.

கையும் காலும் செயலற்று அவன் சித்திர வேலையை எப்படிச் செய்வது என்று சிந்தித்தான்.

வாயினாலேயே சித்திரம் வரையலாம் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

அவன் படுத்திருக்கும் கட்டிலில் அவன் வாய்க்கு நேராக ஒரு பலகையின் மீது காகிதத்தைப் பொருத்திக் கொடுத்து விட வேண்டும். அவன் வாய்க்கு எட்டும் படியாக பிரஷையும், வர்ணங்களையும் வைத்துவிட வேண்டும். அதன்பின் அவன் பிரஷை வாயில் பிடித்துக் கொண்டே சித்திரம் வரையத் தொடங்கினான்.

அவ்வாறு, அவன் வரைந்த சித்திரங்கள் மிக அற்புதமானவை என்று புகழ் பரவியது.(91) தாராள னப்பான்மைஎந்தக் காரணத்திலாவது, ஒரு பத்திரிகையைப் படிக்காத சந்தாதாரர்கள், அந்தப் பத்திரிகையை நிறுத்தி விடுமாறு, பத்திரிகை அலுவலகத்துக்கு கடிதம் எழுதும் வழக்கம் அமெரிக்காவில் அதிகம். பெரும்பாலும் ஒவ்வொரு பத்திரிகைக்குமே அம்மாதிரிக் கடிதங்கள் வருவது உண்டாம்.