பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


(101) துரங்க மூளையா?சதுரங்க விளையாட்டில், உலகப் புகழ் பெற்ற ரிச்சர்டு ராக்வுட் என்பவரைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள்.

ஆட்டத்தில் எவரையும் வெற்றி கொண்டு விடுவார். ஆட்டத்தின் போது அவருடைய கண்களைக் கட்டி விடுவது உண்டு. அப்பொழுதும் கூட காய்களைச் சரியாக நகர்த்தி ஆடுவாராம்.

திறமைசாலியான அவருடைய மூளையை, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்க்க விரும்பினார்கள்.

அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய மூளையைப் பரிசோதனை செய்து பார்க்க அவரிடம் அனுமதி கோரினர். அவரும் அனுமதித்துவிட்டார்.

சிறிது காலத்தில், அவர் இறந்ததும், விஞ்ஞானிகள் அவரது மூளையை ஆராய்ந்து பார்த்தார்கள். மூளையின் அமைப்பானது, விஞ்ஞானிகள் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. - மூளையின் ஒரு பகுதியில் அணுக்கள், சதுரங்கப் பலகையில் எவ்வாறு கட்டங்கள் இருக்கின்றதோ அதேபோல் சதுரக் கட்டங்களாக சேர்ந்து இருந்ததாம். அதாவது அந்த மூளைப் பகுதியே ஒரு சதுரங்கப் பலகை மாதிரி இருந்தது.

அவர் இறப்பதற்கு முன்னர், கடைசியாக கண்களைக் கட்டிக் கொண்டு விளையாடிய பன்னிரண்டு சதுரங்க ஆட்டங்களில் எவ்வாறு அவர் காய்களை நகர்த்தினாரோ,