பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஓர் புருஷன் இராஜாங்கமறிய ரிஜிஸ்டர் செய்து ஓர் பெண்ணை சேர்த்துக்கொண்டு ஓர் குழந்தையும் பிறந்தபின்னர் அந்த இஸ்திரீயையும் பிள்ளையையும் நிராதரவாய் விட்டுவிடுவதற்காய் தாலிகட்டாதது விவாகமல்லவென்றும், ஓர் இந்துவானவன் மற்றோர் மத இஸ்திரீயை விவாகஞ்செய்ய முடியாதென்றுங் கூறுவது எந்த மகாத்மாக்களால் இயற்றிய சட்டமோ விளங்கவில்லை.

இத்தேசத்துள்ளோர் குணமுஞ் செயலும் மாறியபோதினும், ஐயர், முதலி, நாயுடு, செட்டி என்றும் ஒவ்வொருவர் பெயர்களினீற்றிலுமுள்ள தொடர்மொழிகளை சேர்த்துள்ள வரையில் சட்டங்களும் மாறாது போலும்.

ஓர் அமேரிக்கராயினும், ஐரோப்பியராயினும், ஜெர்மனியராயினும் இத்தேசத்துள் வந்து யாதாமோர் விவாகமுமின்றி ஓர் இந்து இஸ்திரீயைச் சேர்ந்து பிள்ளையைப் பெற்றுவிடுவாராயின் அப்பிள்ளைக்குந் தாயிக்கும் ஜீவனாம்ஸம் சகலரும் அறிந்தேனும், அறியாமலேனும் பெறலாமோ. தாலிகட்டாதபடியால் அது விவாகமல்ல. ஓர் இந்துஸ்திரீ அன்னியமார்க்க புருஷனை விவாகஞ்செய்துகொண்டாலும் அது சரியானவிவாகமாக மாட்டாது. ஆதலின் அவரிடம் ஜீவனாம்ஸம் பெறப்போகாதென்று ஏதேனும் ஓர் சட்டமுண்டோ. அதையும் இந்து சட்டதாரிகள் யோசிக்க வேண்டியதேயாகும்.

காந்தருவவிவாகம் - தொல்காப்பியப் பொருளதிகாரம் - மூன்றாவது களவியல்

அதிர்ப்பிலயைம்பூணாரு மாடவருத்தம்மு
ளெதிர்ப்பட்டுக்கண்டியை நனென்ப - கதிர்ப் பொன்யாழ்
முந்திருவர்கண்ட முனிவருகண்காஷிக்
கந்திருவர் கண்ட கலப்பு.

- 2:27; டிசம்பர் 16, 1908 -


29. சாதிகளில் 1008-சாதி அடுக்கடுக்காய் பிரிவதுபோல் காங்கிரசும்

காலத்திற்குக் காலம் பிரியவேண்டும் போலும் இவ்வருஷத்திய காங்கிரஸ் நாகப்பூரில் ஒன்றும், சென்னையிலொன்றுங் கூடப்போவதாய் வதந்தி.

அவ்வதந்தி வாஸ்தவமாயின் நாஷெனல் காங்கிரசென்னும் பெயரை மாற்றிவிட்டு நாகப்பூரில் கூடுவோர் தங்கள் கூட்டத்தின் பெயரை வங்காளியர் காங்கிரசென்றும், சென்னையில் கூடுவோர் தங்கள் கூட்டத்தின் பெயரை பிராமண காங்கிரசென்றும் வைத்துக் கொள்வதே நலம்போலும்.

வங்காளத்தை இரண்டுபிரிவாக கர்ஜன் பிரபு பிரித்து விட்டடியால் இராஜ துவேஷம் ஏற்பட்டதென்று கூறும் கனவான்கள் காங்கிரஸ் கமிட்டி இரண்டுபட்டதற்குக் காரண துவேஷம் யாது கூறுவார்களோ காணவில்லை. நமக்குள்ள ஊழலையும், ஒற்றுமெய்க் கேட்டையும் சீர்திருத்திக் கொள்ள சக்த்தியற்ற நாம் இராஜாங்க சீர்திருத்தங்களை எடுத்துப் பேசுவது வீண் கலபைகளேயாம். கணக்கெழுதுவோன் கணக்கசாதி, பணிக்கு செய்வோன் பணிக்கசாதி எனப் பரவுதல் போல் மிதவாதத்துள் மிதவாதமும், அமித வாதத்துள் அமித வாதமுந் தோன்றும் போலும்.

இத்தகைய இரண்டுபட்ட காங்கிரசின் சென்னை காங்கிரஸ் கூட்டத்துள் சீர்திருத்த வகுப்பாருட் சிலர் பறையர்களைப்பற்றி பரிந்துபேசி அவர்களை முன்னுக்குக் கொண்டுவருவதாக யோசிக்கின்றார்களாம்.

இவ்வகைப்பரிந்த பேச்சுகள் பத்திரிகைகளிலும் கூட்டங்களிலும் பேசக்கண்டுள்ளோமன்றி அநுபவத்தில் அவர்களுக்குள்ள குறைகளை நீக்கியவர்கள் ஒருவருமில்லை.

ஆதலின் நமது காங்கிரஸ் கமிட்டியாரும், உள்சீர்திருத்த சங்கத்தோருஞ் சற்று சீர்தூக்கி நிதானித்து பறையர்களுக்காய் பரிந்துசெய்யும் உபகாரத்தை நிறுத்தி அவர்களுக்குச் செய்துவரும் இடுக்கங்களை மட்டிலும் செய்யாமலிருக்கச் செய்வீர்களாயின் அவ்வுபகாரமே போதுமாகும்.