உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 101


இத்தகைய தன்ம ராஜரீகத்தை அகற்றி தங்கள் சுயப்பிரயோசனத்தை நாடித் திரியும் சொற்ப ஜனங்களின் வார்த்தைகளை நம்பிக்கொண்டு பெருங்குடிகள் ஒன்றுகூடி சுயராட்சியம் வேண்டும் என்பது விசாரிணைக் குறைவேயாம்.

- 2:32; சனவரி 20, 1909 -


40. பிரைமரி ஸ்கூல்களும் அதன் சூப்பர்வைசர்களும்

அதாவது சிறுவர் சிறுமிகளின் கலாசாலைகளில் அவர்கள் கல்வியின் அதிவிருத்தியை மேலுமேலும் கோரி அவர்களைக் கண்ணிமைப்போல் பாதுகார்த்து இடைவிடா விசாரிணையும் மேல்பார்வையுஞ் செய்துவரும் உத்தியோகஸ்தர்களுக்கு இஸ்கூல் சூப்பர்வைசர்கள் என்று கூறப்படும்.

இத்தகைய உத்தியோகஸ்தர்களை நமது காருண்ய கவர்ன்மெண்டார் ராஜாங்க உத்தியோகஸ்தர்களுக்குச் சமதையாய்ச்சேர்த்து சிறுவர்களின் கல்வியை ஆரம்பத்திலே செவ்வைப்படுத்தி விருத்திபெறச் செய்யும் வழிகளைத் தேடுகின்றார்கள்.

இராஜாங்கத்தோரின் இத்தகைய பரோபகார எண்ணத்தையும், எழிய சிறுவர்கள்மீதுண்டாய இதக்கத்தையும் நிலைபெறச் செய்யும் சூப்பர்வைசர்களின் எண்ணங்களும், செயல்களும் எவ்வகையில் இருக்கவேண்டும் என்னும் பொது ஆராய்ச்சியையும், இதன்பொறுப்பையும் கண்டு அவ்வத்தியோகத்திற்குப் பெரும்பாலும் எச்சாதியோரை நியமித்தால் இராஜாங்கத்தோரின் நல்லெண்ணம் விருத்திபெருமென்பதை குடிகளே விளக்கி அவற்றை நிலை நிறுத்தல்வேண்டும்.

அதாவது:- பெரிய சாதிகளென்று பெயர் வைத்துக் கொண்டிருப்போர்கள் சிறியசாதிகள் என்று அழைக்கப்படுவோர் வாசஞ்செய்யும் கிராமங்களிலுள்ளப் பள்ளிக்கூடத்து சிறுவர்களை அவர்கள் வாசிக்கும் சாலைகளுக்கே நேரில் போய் பார்வையிடவும், பரிட்சை செய்யவுமில்லாமல் தூரவிலகி சில தோப்புகளிலும், தங்களுக்கு வசதியான இடங்களிலும், உழ்க்கார்ந்து கொண்டு பிள்ளைகளை தருவித்து தூர நிறுத்திக் கொண்டு தாங்களும் பரிட்சை செய்துவிட்டோம் தாங்களும் பார்வையிட்டோமென்று (ரிப்போர்டுகள்) எழுதிவிடும்படியான சிலசாதியாரிருக்கின்றார்கள்.

அவ்வகை சாதியோரை இச்சூப்பர்வைசர்வேலைகளுக்கு நியமிப்பதானால் இராஜாங்கத்தோரின் நல்லெண்ணம் முற்றும் பாழடைந்து போவதுடன் இராஜாங்கத்தின் பணமும் வீண்விரயமாகும். ஆதலின் சாதிபேதமற்றவர்களும், சமயபேதமற்றவர்களும், தன்னவர் அன்னியரென்னும் பட்சமற்றவர்களும், மனிதர்களை மனிதர்களாக எண்ணுகிறவர்களும், பேராசை அற்றவர்களுமாகிய பெரியோர்களையே பார்த்து சூப்பர்வைசர் உத்தியோகங்களில் நியமிப்பதானால் சகலசாதி சிறுவர்களைக் கல்வி விருத்திச்செய்து காப்பாற்றுவதுடன் கருணைதங்கிய ராஜாங்கத்தோர் கருத்தையும் ஈடேற்றுவார்கள்.

- 2:33; சனவரி 27, 1909 -


41. பார்ப்பார்களென்று சொல்லிக்கொள்ளுவோர்களுக்கும் பறையர்களென்று அழைக்கப்படுவோர்களுக்குமுள்ளப் பழயவிரோதத்தை பரக்கப்பாருங்கள்

நாம் இப்பத்திரிகையின் வாயலாய் பார்ப்பார்களென்போருக்கும், பறையர்கள் என்போருக்கும் பெளத்தமார்க்கத்தை அழிக்கவேண்டி நேரிட்ட பூர்வ விரோதமே நாளதுவரையில் வைத்துக் கொண்டு திராவிட பௌத்தர்களைத் தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி பறையர் பறையரென்று பதிகுலையச் செய்துவருகின்றார்களென்று விளக்கிவருகின்றோம்.

அதற்குப் பகரமாக இப்போதும் நடந்துவரும் அக்கிரமத்தைப்பாருங்கள்.

அதாவது:- செங்கற்பட்டு ஜில்லா மதுராந்தகம் தாலுக்கா, 96-நெம்பர்