அரசியல் / 155
எப்போது பிரசிடென்டானவர் ஒவ்வோர் வீதிக்கும் வருகின்றாரோ அப்போதே குடிகள் யாவரும் அவரருகிற்சென்று தங்களுடையக் குறைகளை நேரிற் சொல்லிக்கொள்ளுவதுமன்றி அதிகமாக ஏற்படுத்தியுள்ள வரியின் ரசீதுகளையும் தங்களுக்குள்ள வீடுகளையுங் காண்பிப்பார்களானால் வேண சுகங்கிடைக்கும்.
சகல சீர்திருத்தங்களையும் நேரில் வந்து பார்வையிட்டு நடத்தும் பிரசிடென்டே வரிபோட்டுவிடுகின்றாரென்னில் அதிகமுள்ள வரிகளை ஆராய்ந்து குறைக்கவும் வரியில்லாமலே முநிசிபாலிட்டியை வஞ்சிக்கும் வியாபாரிகளுக்கு வரிகளை ஏற்படுத்தத்தக்க முயற்சிகளைத் தேடுவதுமாகிய அதிகாரம் பிரசிடென்டவர்களுக்கு உண்டு. அத்தகைய ஏற்பாடுகளையும் அவர் கவனியாவிடில் நகர சுகாதாரமென்னும் பெயரற்றுப்போம்.
ஓர் ஐரோப்பியப் பிரசிடென்டே தனது சுகத்தைப் பாராது வெய்யிலிலுங் கானலிலும் அலைந்து தனதலுவலை நடாத்திவருவதுபோல் சுதேசிகளே கமிஷனர்களாக ஏற்படுங்கால் அவரவர்கள் வீடுகள் தோரும் வண்டிகளைக் கொண்டுவந்து ஏற்றிக்கொண்டுபோய் (வோட்டு) வாங்கும்படியானவர்கள் மறுபடியும் அவரவர்கள் வீட்டண்டை வந்ததைப்பார்த்ததுண்டா. குடிகளே உங்களுக்கு என்ன வரிப் போட்டிருக்கின்றார்களென்னும் விசாரிணை உண்டா. அந்தந்த வீதிகளில் விளக்குகளுண்டா என்னும் பார்வையுண்டா. வீதிகளெங்கும் குழாய் ஜலங்கள் வருத்துண்டா என்னும் நோக்கமுண்டா. அந்தந்த கமிஷனர்களின் டிவிஷன்களின் சாக்கடை நாற்றமில்லாத சுகமுண்டா என்னும் பார்வையுண்டா இல்லை.
சுதேச கமிஷனர்களாயிருந்தும் சுதேசகுடிகளின் சுகாதாரங்களை கண்ணோக்காதவர்களாகவும் குடிகள்பார்வைக்கு அடுத்து தோன்றாதவர்களாகவும் இருக்கின்றபடியால் பிரசிடென்டின் தெரிசனத்தை அடுத்துக் காண்பவர்களுக்குக் கடுப்பாகவே காணப்படுகின்றது. அது பிசகேயாம். ஒவ்வோர் காரியாதிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு செய்வதே இயல்பாகும்.
- 3:2; சூன் 23, 1909 -
58. கனந்தங்கிய லார்ட் மார்லியவர்களின் கருத்து
பிரபலமிகுத்த பிரிட்டிஷ் ஆட்சியில் மதியூகியாக விளங்கும் லார்ட் மார்லியவர்களின் மந்திராலோசினையை ஒவ்வொருவரும் மிக்க ஆலோசிக்க வேண்டியதாகும்.
அதாவது, லார்ட் மார்லியவர்கள் ஐரோட்டா தேசக் குடிகளின் ஆரவாரத்தை அறிந்தவரேயன்றி இந்துதேசத்தோர் இடியும் புடையும் அவர் கண்டறியார்.
ஐரோப்பாவிலுள்ளப் பிரபுக்கள் கமிஷனராக ஏற்படுவார்களானால் முநிசபில் பணத்தில் யாதொரு பலனையுங் கருதாது தங்கள் சொந்த சிலவிலேயே வீதிவீதியாய் உலாவி குடிகளுக்குள்ள கஷ்டநிஷ்டூரங்களை அறிந்து அவர்களுக்கு வேண்டிய சுகங்களை அளித்து வருகின்றார்கள்.
இந்துக்களில் ஏற்படும் முநிசபில் கமிஷனர்களோ வருஷத்திற்கு ஒரு முறை (ஓட்டு) வாங்குவதற்கு வீட்டண்டை வண்டி கொண்டுவருங்கால் காணப்பட்டவர்கள் மறுபடியுங் காணுவது கிடையாது.
இப்பேர்கொற்ற சிரத்தையுள்ள இந்துக்கள்வசம் பெருத்த உத்தியோகங்களை அளிக்கலாமென இவர் யோசிப்பது மிக்க விந்தையாம்.
சிலகால் கனந்தங்கிய லஜ்ஜிபதி ராய், கோக்கேல் முதலிய பெரியோர்களுடன் சினேகஞ்செய்பவராதலின் அவர்களிடமுள்ள வித்தை, புத்தி, பகை, சன்மார்க்க முதலியப் பெருந்தகமெகளைக் கண்டு இந்தியாவில் இருப்போரெல்லாம் இவர்களைப் போலவே இருப்பார்களென்று நம்பிக் கொண்டு ஐரோப்பியர்கள் பார்த்துவரும் அந்தஸ்தான உத்தியோகங்களை இந்துக்களுக்குங் கொடுக்கலாமென்று உத்தேசிக்கின்றார்போலும்.