உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 159


இதன் உளவறிந்தவர்களே தற்காலம் வெளிதோன்றி லார்ட் கிச்சினரவர்களை ஆலோசினை சங்கத்தில் அமைக்கப்படாதென்று கூச்சலிடுகின்றார்கள். கருணைதாங்கிய இராஜாங்கத்தோர் இவைகளை சீர்தூக்கி வங்காளக் கவுன்சலில் ஓர் மிலிட்டேரி அதிபதியை நியமிப்பதுடன் சென்னை பம்பாய் முதலிய இராஜதானி கவுன்சல்களிலும் ஒவ்வோர் மிலிட்டேரி அதிபதிகளை நியமித்து ஆலோசினை சங்கங்களை வலுச்செய்யவேண்டும்.

ஈதன்றி ஒவ்வோர் ராஜதானியிலும் பிரிகடியர் ஜெனரல்களும், ஜெனரல்களும் அவர்களுக்குப் போதுமான பிரிட்டிஷ் இராணுவ வீரர்களுமிருத்தல் வேண்டும்.

இராஜாங்கத்தோர் அத்தகைய ஏற்பாடுகளை செய்து விடுவார்களாயின் “பூனைக்குந்தோழர் பாலுக்கும் காவல்” போலிருக்கும் மித்திரபேதச் சத்துருக்கள் அடங்குவதுடன் அவர்கள் தூண்டுதலால் சுதேசியம் என்பது இன்னது இனியதென்றறியாதபேதை ஜனங்கள் யாவரும் பாழடையாமல் சுகம் பெற்று வாழ்வார்கள்.

நூறுகுடிகளைக் கெடுத்து தாங்கள் ஒருகுடி சுகமடையக் கோறும் சாதித்தலைவர்களின் கொடியச்செயல்களை அடக்கியாளுவதற்கு அறக் கருணையாம் செங்கோலுதவாது, மறக்கருணையாம் கொடுங்கோல் கிஞ்சித்திருந்தே தீரவேண்டும்.

மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால் மிஞ்சுவதுமாகிய வஞ்சநெஞ்சமுள்ளோர் வாசஞ்செய்யும் இடங்கடோரும் பிரிட்டிஷ் இராணுவத் தலைவர்களும் இருப்பார்களாயின் தேசம் சிறப்படைவதுமன்றி சகலசாதி குடிகளும் ஆறுதலடைடவார்கள்.

- 3:5; சூலை 14, 1909 -


62. இந்தியர்களை இன்னும் இழிவடையச் செய்த மாகொடிய மாணாக்கன்

பஞ்சாப் தேயத்தோனாகும் மதார் லாலென்னும் ஓர் மதம்பிடித்த மாணாக்கன் விருத்தாப்பிய ஐரோப்பியராகும் சர் உல்லியம் கர்ஜன் உவில்லி யென்னும் ஓர் துரைமகனை சுட்டுக் கொன்றுவிட்டானாம்.

இத்தகையக் கொடுங் கோபியும், படும்பாவியுமாயினோனுக்கும் படிப்பு ஒருகேடோ, “பொல்லார்க்குக் கல்விவரில் கர்வமுண்டாமென்னுந்" தனது மிலேச்சகுணத்தைக் காட்டிவிட்டான் போலும்.

அந்தோ! இப்படுபாவி கொடுங்கோபத்தினால் மற்ற இந்திய மாணாக்கர்களையும் நிந்தைக்கு ஆளாக்கிவிட்டானே.

இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கேகி வித்தைக் கற்றுக்கொள்ளும் மாணாக்கர் மீதுள்ள மகிழ்ச்சியைக் கெடுத்து அதிகாரிகளை மாளா சந்தேகத்திற்குள்ளாக்கி விட்டானே.

அன்புடன் கற்பிக்கும் போதனாசிரியர்கட்கும் அகத்துட் சந்தேகத்தை விளைத்து விட்டானே.

இத்தியாதி மித்திரபேத சத்துருக்கள் ஒவ்வொருவர் தோன்றி இந்தியர்களின் மீதுள்ள அன்பையுங் கெடுத்துவருகின்றார்கள்.

இவ்வகைப் படுபாவிகள்மீது இந்தியர்கள் பரிதாபப்படாது மாணாக்கர்களை வித்தையில் விரும்பியிருக்கும்படிச் செய்தல் வேண்டும். வித்தையை விரும்பாமல் இராஜாங்க சத்துருவாக விரும்புவார்களாயின் அவர்கள் கெடுவதுடன் நாமுங் கெடவேண்டியதேயாம். அதாவது இரும்பையடிக்கும் அடிதுரும்பையும் பற்றுமென்பது துணிபு. இத்தகையக்கொரூரச்செயல்கள் தோன்றுங் காரணங்களை கனந்தங்கிய லார்ட் மார்லி அவர்கள் சீர்தூக்கி ஆலோசித்தல் வேண்டும்.

அஃது யாதுக்கென்பீரேல், லார்ட் மார்லியவர்களோ இந்தியர்களுக்குப் பெருத்த உத்தியோகங்களை அளிக்கவேண்டுமென்னும் வீண்வார்த்தைகளை பேசிக்கொண்டு வருகின்றார். அவர்வார்த்தையைத் தடுத்து, உள்ள கெடுதிகளை