அரசியல் / 191
11. விடை : பெண்களுக்கு ருதுசாந்தியாகும் மங்கைப்பருவமாகாமல் விவாகஞ் செய்யக்கூடாது.
12. விடை: மணவரையில் சத்தியஞ்செய்து சேர்த்துக்கொண்ட பெண்ணை அவள் சத்தியம் மீறாமலிருக்க நீக்கக்கூடாது.
13. விடை : மங்கை பருவத்தில் விதவையானப் பெண்ணை மறுமணமில்லாமல் வீட்டில்வைக்கப்படாது.
14. விடை: தங்கடங்கட் பெயர்களினீற்றில் ஒவ்வொரு தொடர்மொழிகளை சேர்த்துக்கொண்டு மற்றவர்களை இழிவுகூறக்கூடாது.
15. விடை : ஒவ்வொரு தேசத்து மனிதர்களும் பூர்வத்தில் மிருகத்திற்கு சமானமாகவிருந்து விவேக முதிர்ந்தபோது நாகரீகத்திற்கு வந்தவர்களாயிருக்கின்றபடியால் சிலர்கள் சீலமாயிருக்கலாம் மற்றவர்கள் சீலத்துக்கு வரலாகாதென்று பொறாமெய்க்கொள்ளக் கூடாது.
16. விடை : ஒவ்வொரு தேசங்களில் விளையப்பட்ட பதார்த்தங்களே அத்தேசவாசிகளுக்கு ஆகாரங்களா இருக்கின்றபடியால் மற்றதேசத்தோர் ஆகாரங்களை இழிவுகூறக்கூடாது.
17. விடை: மனிதன் சுயபுத்தியோடுங்கூடி இருக்கின்றகாலத்திலும் தவருதலடைகிறபடியால் அறிவை மயக்கும் மதுபானங்களை புசிக்கக்கூடாது.
18. விடை : சகல தத்துவ சாஸ்திரங்களிலும் இஸ்திரீயின் கருப்பத்தில் கட்டுப்பட்டுப் பிறப்பது இழிவு. பிறந்துந் தன்னை அறியாமல் இறந்துவிடுவது பேரிழிவென்றுங் கூறியிருக்கின்றபடியால் பெண்களின் கருப்பத்திற் கட்டுபட்டு வெளிவந்த ஒவ்வொரு மனிதனும் நான்தான் பிரதமசாதியென்று சொல்லக்கூடாது.
மேற்கூறிய பதினெட்டு வினாக்களுக்கும் உட்படாத ஆசாரவிளக்கங்கள் இவைகளேயாம்.
PUNDIT, C. IYOTHEE THOSS,
A.D.J, SABHA.
MADRAS, NORTH BLACK TOWN, OCTOBER 1892.
- 3:23; நவம்பர் 17, 1909 -
கனந்தங்கிய திருவாங்கூர் திவான் ஆபீசார் கேட்டக்கேள்விகளுக்கு உத்திரவெழுதி அச்சிட்டுப் புத்தகங்களை திருவாங்கூர் திராவிடசபையோருக்கு அனுப்பி அவர்களால் வந்தனையுடன் திவான் ஆபீசோருக்கு அனுப்பியதின்பேரில் அவர்களுங் கண்டு சந்தோஷித்து இவ்வேழை சிறுவர்களுக்குப் போதுமான கலாசாலைகள் வகுத்து இலவசக்கல்வி கற்பிக்கும்படியான தயாள உத்திரவை அளித்தார்கள்.
அவ்விடமுள்ள சிறுவர்களுக்குக் கலாசாலைகள் ஏற்பட்ட பின்னர் சிலகாலஞ்சென்று கனந்தங்கிய ரிஜிஸ்டிரார் ஜெனரல் ஸ்ரீனிவாச ராகவையங்காரவர்கள் (Forty years report) பார்ட்டியியர்ஸ் ரிபோர்ட் என்னும் ஓர் புத்தகம் அச்சிட்டு கவர்ன்மென்டாருக்கு அநுப்பியுள்ளதில் இந்த பறையரென்னும் வகுப்பார் சீர்பெறவேண்டுமானால் ஒன்று துலுக்கர்களாகிவிட வேண்டியது. அல்லது கிறிஸ்தவர்களாகிவிடவேண்டியது என்று தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்ததைக் கண்ணுற்ற திராவிடர்கள் நமது கனந்தங்கிய சீனிவாசையங்காரவர்கள் மக்கான் அருகே பங்கியடித்திருக்குந் துலுக்கர்களையும், புறாவிட்டுத் திரியுந் துலுக்கர்களையும், சேரிகளில் ஓடேந்தித்திரியுங் கிறிஸ்தவர்களையுங் கண்ணுற்றுப்பாராமல் இத்தகைய ரிப்போர்ட்டு அநுப்பியது பிசகென்றும், அவர்கள் நசுங்குண்டுவருங்காரணங் கண்டறிந்து சீர்திருத்த வேண்டுமென்றும், சென்னையில் மத்தியிலுள்ள கிராமமாகும் ஆல்தோட்டத்தில் ஜலவசதியில்லா சுகக்கேடுகளையும், துர்நீர் போக்கில்லாப் பாதை கேடுகளையும், விளக்கியதின்பேரில் சில சுகாதார சீர்திருத்தங்கள் ஏற்பட்டது.
அதன்பின் 1898 வருஷம் ஜூன்மீ கனந்தங்கிய கர்னல் ஆல்காட் துரையவர்கள் அடையாற்றில் ஏற்படுத்தியிருந்த கலாசாலைவிஷயமாக சில