அரசியல் / 209
அங்ஙனமின்றி ஒருவர் சொல்லும் வார்த்தையை ஏற்றுக்கொண்டு ஒருவர் சார்பாய்ப் பேச ஆரம்பிப்பதால் கற்றக் கல்வியினளவும் நில்லாது மனோகலக்கத்தை மேலுமேலும் விருத்தி செய்துக்கொள்ளுகின்றார்கள்.
கல்வியில் மிகுத்தப் புருஷர்கள்தான் இவ்வகை மனோகலக்கத்தில் இருக்கின்றார்களென்னினும் கல்விகற்ற இஸ்திரீகளோ அவர்களினும் மிக்க மனோகலக்கமுற்றிருக்கின்றார்கள். அஃது யாதெனில், ஓட்டுக்கொடுக்கும் விஷயங்களிலும், சங்கங்களில் அங்கங்களாக சேரும் விஷயங்களிலும் கல்லுகளை எடுத்து கண்ணாடி ஜன்னல்களை உடைப்பவர்களும், கதவுகளை உடைத்து உள்ளுக்கு நுழைகிறவர்களுமாகிய மனோகலக்கமுற்றிருக்கின்றார்கள்.
ஐரோப்பாகண்ட புருஷர்களிற் சிலரும் இஸ்திரீகளிற் சிலருந் தாங்கள் கற்றக்கல்வியின் பயனை மனோகலக்கத்தில் விட்டு வாய்வாதங் கைவாதங்களை செய்துவந்தபோதிலும் இந்தியாவிலுள்ளப் புருஷர்களிற் சிலரோ வெடி குண்டின் விஷயத்தில் கற்றக்கல்வியை விடுத்து மனோகலக்கத்திற்குள்ளாகி மற்றுமுள்ளக் குடிகளையும் இராஜவிரோதத்திற்கு உள்ளாக்கி சீர்கெடுக்கப் பார்க்கின்றார்கள்.
இத்தகைய கற்றபலன் கலகத்திற்கேதுவாவதேதெனில், “கண்டுபடிப்பதே படிப்பு மற்றப்படிப்பெல்லாம் தெண்டபடிப்பென்னறி” என விவேகிகள் கூறியுள்ளவாறு நீதிநெறி ஒழுக்கங்களை யூட்டுங் கலைநூற்களைக் கற்றுத் தேறாது ஓர் கடவுளிருந்து உலகத்தைப் படைத்து அதினால் மிக்கக் கவலையும் பட்டார், பாடும் பட்டாரென்னுங் கட்டுக்கதைகளும், ஓர் கடவுள் அறியாதனத்தால் உலகை படைத்து அதிலொருவனைக் கொல்ல ஆமையாய்ப் பிறந்தார், மற்றொருவனைக்கொல்ல ஊமையாய்ப் பிறந்தாரென்னுங் கட்டுக் கதைகளும், மற்றோர் கடவுள் அனாதியாயிருந்து ஆதியாயிருந்த மற்றோர் மனிதனைக் கொல்ல ஆதியாய யானை தலைமகனை அநுப்பினார், பூனைதலை மகனை அநுப்பினாரென்னுங் கட்டுக்கதைகளையும் வாசித்து கலக்கத்திற்குள்ளாயதுடன் ஒருவன் பாகங் கொடுக்காவிட்டால் ஊராரெல்லோரையுங் கொல்லும் கதைகளையும் ஒருவன் மனைவியை மற்றொருவன் எடுத்துப்போய் விட்டால் அவன் ஊராரெல்லோரையுங் கொல்லுங் கதைகளையும், ஊராரெல்லோரும் அக்கிரமஞ்செய்தால் அவர்கள் குற்றத்திற்காக ஒருவரை பிடித்துக்கொல்லுங் கட்டுக்கதைகளையும், சிறுபோதினின்று வாசித்து வருங்கால் சீவகாருண்யமும் நீதிநெறிமாற்று கற்றக் கல்வியால் பொய்யை மெய்யாகச் சொல்லும் வல்லபமும் அவனை வெல்லுவதால் பலனுண்டு, கொல்லுவதால் பலனுண்டென்னும் விதண்டவாத மனோகலக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.
இத்தகையக் கெடுதிகளுக்கெல்லாம் காரணகர்த்தர் யாவரென்பீரேல், மதக்கடைகளைத் திறந்து சாமியென்னுஞ்சரக்குகளைப்பரப்பி எங்கள் தேவனே தேவன் எங்கள் மதமேமதமென வியாபாரஞ்செய்து அதினால் சீவிக்கும் பொய்க்குருக்களேயாகும்.
பொய்க்குருக்கள் யாரென்றும் தேறவிசாரித்தறிந்து பொய்யர்கள் போதகங்களை அகற்றி மெய்யர்களின் நீதிநெறியினின்று கலைநூற்களைக் கற்றுத்தெளிவார்களாயின் இராஜவிசுவாசமும், இராஜ நீதிநெறிகளிலன்பும், இராஜவாட்சியில் ஒடுக்கமும், இராஜவாளுகையில் அமைதியுமுற்று சுகித்திருப்பார்கள். அங்ஙனமின்றி இராஜகீயவதிகாரிகள் யாவரும் நீதிநூற்களை வாசித்து நீதியின் செங்கோலை நடாத்திவருங்கால் அநீதி நூற்களை வாசித்து அநீதிவாக்கியங்களை மெய்யென்றிருப்போருக்கு நீதிநெறியாம் பிரிட்டிஷ் ராட்சியபாரம்மிக்கக் கடினமாகவே விளங்கும்.
எவ்வகையில் என்பீரேல், பொதுவாயுள்ள ஓர்குளத்தில் சில மனுமக்களை சுத்தசல மொண்டு குடிக்கவிடாமற் செய்யுங் கூட்டத்தோர் முன்பு வீதிவீதிக்குக் குழாய் ஜலங்களை விடுத்து சகலருஞ் சுகமாக நீரருந்துங்கோள் என்றால் முன்பு சுத்தஜலமொண்டு குடிக்கவிடாமற் செய்துவந்தவர்களுக்குக் குழாய்ஜலம் விடுத்து சகலரையும் சுகமாக நீரருந்தவைத்த இராஜாங்கம் விரோதமாகத்