அரசியல் / 211
பெண்களுக்குக் கல்வி கொடுக்காமல் தடுத்துவைத்தக் காரணமும் இதுவேயாகும். இதன் யதார்த்தமறியவேண்டியவர்கள் தங்கள் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்திருக்குங் கைம்பெண்கள் வாசித்துள்ளவர்களா வாசிப்பில்லாதவர்களாவென்பதை அவர்கள் தானப்பத்திரங்களைக் கொண்டே தெரிந்துக்கொள்ளலாம்.
இத்தகையோர் கள்ளையும் பொய்யையும் அகற்றாதிருப்பது பெரும்பாதகமேயாம்.
கள்ளுக்கடை அறிவைமயக்கிக் கேட்டுக்கொண்டுபோகும் பாதகமாகும். கடவுள் கடை தாங்கள் கேளாததும் காணாததுமானப் பொய்யைச்சொல்லிப் பொருள் பறிக்கும் பாதகமாகும்.
இவ்விரண்டின் செயலையும் முற்றாய்ந்த மயக்கமற்றத் தெளிவினின்று மெய்ப்பொருள்காண்பதே காட்சியென்னப்படும்.
- 3:25; டிசம்பர் 1, 1909 -
96. ஜோனாஸ்பர்க் தமிழ் மஹாஜனசபையார்
1909 வருஷம் டிசம்பர் மீ 1உ வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகையில் கனந்தங்கிய சென்னை மஹாஜன சபையோருக்கு ஜோனஸ்பர்க் தமிழ் மஹாஜனசபையோர் ஓர் விஞ்ஞாபனம் அனுப்பியுள்ளதாகக் கண்டிருக்கின்றது.
அவ்வகைக் கண்டுள்ள விஞ்ஞாபனத்தின் கருத்தோ யாதெனில், “அத்தேசத்தோர் கொடிய சட்டத்தை அநுசரித்து துன்பத்தை அநுபவிப்பதினும் சட்டத்தை அங்கிகரியாமைக்கு வருந் துன்பத்தை அநுபவிப்பதே மேலெனத் துணிந்து பதிவுப் பத்திரங்களை எல்லாம் அக்கினி பகவானுக்குச் சமர்ப்பித்துவிட்டு எதிர்த்து நிற்கின்றோம்.” என்று கூறியதின்பின் இந்தியர்கள் அதிக துன்பத்தை அநுபவிக்கின்றோமென்று வரைந்திருக்கின்றார்கள்.
இத்தகைய தமிழ் சபையார் தங்களை இந்தியர்களென்று எப்போது பிரித்துக்கொண்டார்களோ அப்போதே ஜோனாஸ்பர்க் அன்னியர் தேசமென்பது சொல்லாமலே விளங்கும்.
அவ்வகை அன்னியர்தேசஞ் சென்றுள்ளவர்கள் அத்தேசத்தோர் சட்டத்திற்குப் பொருந்தியே வாழவேண்டுமென்பதும் சொல்லாமலே அமையும்.
அவர்கள் சட்டத்திற்குள் அமைந்து வாழ்கப்பிரியமில்லாதவர்கள் அத்தேசத்தை விட்டு நீங்கிவிடுவதே நியாயமாகும். அங்ஙனமின்றி ஈட்டிமுனையில் உதைத்து காலில் சீழ்பிடித்து அதி வாதைப்படுகிறோமென்றால் அன்னோயை சகித்து ஆற்றிக் கொள்ளவேண்டியவர்கள் அவர்களேயாகும்.
அத்தேசத்தில் இவர்கள் பழங்குடிகளாயிருந்து சட்டம் நூதனமாகத் தோன்றியிருக்குமாயின் அச்சட்டத்தின் நடவடிக்கையும், செயலும் நாளுக்குநாள் நிறைவேறி வருவதையறிந்து அதி உபத்திரவமாகக் காணப்படுமாயின் அதன் உபத்திரவத்தை பிரிட்டிஷ் ராஜாங்கத்தோருக்குத் தெள்ளற விளக்கிக் கேட்பார்களாயின் அச்சட்டத்தின் மாறுதலுக்காய் ஆலோசனைகளைச் செய்து சீர்திருத்துவார்கள். அவற்றிற்கு மாறாக அத்தேசத்திலிருந்துகொண்டே அவர்கள் சட்டத்திற்கு அடங்கமாட்டோமென்றால் எந்த ராஜாங்கத்தான் இவற்றை ஏற்றுக்கொள்ளும்.
இந்துதேசத்தில் வாசங்செய்யும் சில மனிதர்கள் தங்கள் வீடுகளிலும், பொதுவாய்க் கோவில்களிலும் சில மனிதர்களை வரலாகாதென்று தடுத்துவைத்திருக்கின்றார்கள். அம்மனிதர்கள் மீறி வந்துவிட்டாலோ, அவர்களைத் தெண்டிக்கத்தக்க சட்டத்தையும் வகுத்து வைத்திருக்கின்றார்கள். அவ்வகை தெண்டித்தும் வருகின்றார்கள். இத்தகைய சட்டத்தை நியாயந்தானெனப் பார்த்திருக்கும் இந்துதேச பாரதமாதாவானவள் ஜோனாஸ்பர்க்கிலுள்ளோர் நியாயந்தீர்க்கப்போகிறாளா, இல்லை. இந்தியாவிலுள்ளோர் கீழ்ச்சாதி