உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கவர்ன்மெண்டாருக்கும் ஏதுகெடுதி உண்டாகுமோ நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. சில இங்கிலீஷ் கனவான்கள் நாயருக்கு உறுதிவாக்களித்தபடி கடைசி வரையிலும் அவ்வார்த்தையைக் காப்பாற்றி கடையில் ஒட்டிங் சமயத்தில் அவர்களுடைய உறுதிவாக்கை நிறைவேற்றினார்கள். இப்பேர்பட்ட குணமல்லவோ அதிகாரம் செலுத்தும் உத்தியோகஸ்தர்களுக்கு இருக்க வேண்டியது. அப்படியுள்ள குணங்களையுடைய உத்தியோகஸ்தர்களிடத்தில், கவர்ன்மெண்டைக் கொடுத்தாலல்லவோ சீராய் நடைபெறும்.

டி.எம். நாயர் முனிசிபல் விஷயங்களில் அதிகமாக ஊக்கமெடுத்து நுழைந்து சகலவிதமான காரியங்களையும் பார்த்ததில் அவருக்கு நல்லபெயர் கிடைக்காதபோதிலும் அநேக கீழான முனிசிபல் உத்தியோகஸ்தர்களுக்கு அவர் ஒரு நியாயவாதியாயிருந்தார். அவர் நடத்திவந்த முனிசிபாலிட்டிக்காக செய்த வேலையை அநேக ஜனங்கள் அங்கீகரித்து இருக்கிறார்கள். ஆனால் அவரை அநேக முனிசிபல் கவுன்சிலர்கள் பிரியப்படவில்லை. ஏனெனில் அவர் மற்ற சில முனிசிபல் கமிஷனர்களைப் போலத் தங்களுடைய பெருமெயை நாடி தமது ஆசனத்தில் வெறுமனே உழ்க்கார்ந்துவர சேரவில்லை. ஆனால் ஜனங்களுடைய சுகத்தை நாடி சேர்ந்தவர். அவர் இங்கிலாந்துக்குப்போய் அவ்விடத்திலிருந்து வாசித்து ஆங்கிலேயர்களுடைய நடை உடை பாவனைகளைப் பின்பற்றினவரானபடியால் அவருக்கு ஆங்கிலேயர்களுக்குள் உண்டாகும் பொது ஊக்கம் இவருக்கும் உண்டாயிருக்கிறது. நேடிவ் முனிசிபல் கவுன்சிலர்கள் அவர்கள் முனிசிபல் கமிஷனர்களாகிற வரையிலுந்தான் அவர்களுடைய இலாகாவிலுள்ள ஜனங்களைப் பார்ப்பதும் அப்படி இப்படி செய்வோமென பகர்வதும் உண்டு. முனிசிபல் கமிஷனர்களானவுடனே அந்த இடங்களுக்கும் வருவதில்லை, அந்த ஜனங்களையும் பார்ப்பதில்லை. முனிசிபாலிடியாரால் அவர்களுக்கும் அவர்களுக்குப் பிரியமானவர்களுக்கும் வேண்டிய காரியங்களைப் பார்த்துக்கொண்டு இருப்பது வழக்கம். ஆனால் ஆங்கிலேயர்களோ முனிசிபல் கமிஷனர்களாக இருந்தால் அவர்களுடைய இலாக்காவில் அடிக்கடி சென்று பார்த்துக்கொண்டும், ஜனங்களை விசாரித்துக்கொண்டும் இருந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம். இம்மாதிரி யாகவே டி.எம். நாயரவர்களும் செய்து வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறோம்.

டி.எம் நாயர் வெளிப்படுத்திய குணங்களையுடைய லெஜிஸ்லேடிவ் கவுன்சில் நேடிவ் மெம்பர்கள் தங்களுக்கும், தங்கள் பந்துமித்திரர்களுக்கும் உண்டாகும்படியான சுகத்தைச் செய்வார்களேயொழிய ஜனங்களுக்கு பொதுவான சுகத்தைச் செய்விப்பார்களென்று நாம் கிஞ்சித்தும் நினைக்க இடமேயில்லை. இவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயர்களுக்கே லெஜிஸ்லேடிவ் மெம்பர்களாக லார்ட் மார்லி ஸ்கீமில் ஏற்படுத்தியிருப்பாராயின் இந்தியாவுக்கு மிகுந்த சுகமும், ஆறுதலும் உண்டாகுமென்பதற்கு யாதொரு ஆட்சேபனையில்லை.

சாதிபேத மிக்கோர் வசத்திலும், சமயபேத மிக்கோர் வசத்திலும் பிரிட்டிஷ் பிரதம உத்தியோகங்களைக் கொடாமலிருப்பதே குடிகளுக்கு சுகமாகும். ஆதலின் பிரிட்டிஷ் ஆட்சியார் இவற்றைப் பெரும்பாலும் கண்ணோக்கி சாதிபேதமற்றோரை ஆதரிக்கப் பிராத்திக்கின்றோம்.

- 3:32; சனவரி 18, 1910 -


108. கத்தோலிக்கு கிறிஸ்தவர்களும் சாதியும்

சென்றமாதம் கத்தோலிக்கு கிறிஸ்தவர்கள் கூடிய (சோஷியல் காதரிங்) என்னும் உள் சீர்திருத்தக் கூட்டத்தில் சகல வகுப்பாரும் சகோதிர வாஞ்சையாய்க் கூடி சிறுதிண்டி முதலிய பட்சணங்களெடுத்துக்கொண்டும், ஒருவருக்கொருவர் கைலாகுக் கொடுத்தும் அன்பு பாராட்டிக் கிறிஸ்துவின் பிறப்பையும், அவரது சிறப்பையுங் கொண்டாடியவற்றைக் கேழ்வியுற்று மிக்க ஆனந்திக்கின்றோம்.

இத்தகையக் கூட்டத்தின் ஒற்றுமெயே கிறீஸ்து அவரானாரென்னும் அழகை தரும். இவ்வகையான பயிரங்கக் கூட்டத்தில் சாதிபேத மென்னும்