238 / அயோத்திதாசர் சிந்தனைகள்
குடிகளை பயமுறுத்தி நீதிசெலுத்தும் உத்தியோகம் கொடாமலும், குடிகளைக் கண்டித்துப் பணம் வசூல் செய்யும் உத்தியோகங்களைக் கொடாமலும் தடுத்து இத்தகைய உத்தியோகங்கள் யாவையும் பிரிட்டிஷ் ஆட்சியோர் நடாத்திவருவார்களாயின் சகல சாதிகுடிகளும் சுகம்பெற்று வாழ்வதுடன் இராஜதுவேஷ சிந்தைகளகன்று இராஜ விசுவாசத்தில் நிலைப்பார்கள்.
அங்ஙனமின்றி இந்தியர்களுக்குத்தக்க உத்தியோகங்களைக் கொடுத்து ஆதரிக்க வேண்டுமென்னும் அன்பிருக்குமாயின் தங்களைப்போல் சாதி வித்தியாசமற்றவர்களும், தங்களைப் போல் சமயவித்தியாச மற்றவர்களையும், தங்களைப்போல் பொருளாசையற்றவர்களையும், தங்களைப் போல் வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் நிறைந்துள்ள இந்தியர்களைக் கண்டெடுத்து இராஜாங்க பிரதம் உத்தியோகங்களை அளிப்பார்களாயின் சகல் ஏழைக்குடிகளும் பிரிட்டிஷ் ஆட்சியில் சுகசீரடைவதுடன் தேசமும் சிறப்புற்று இராஜவிசுவாசமும் பெருகி பிரிட்டிஷ் ஆட்சியும் ஆறுதலடையுமென்பது சத்தியம் சத்தியமேயாம்.
- 3:38; மார்ச் 2, 1910 -
117. நெடால் எமிகிரேஷன்: இந்தியர் கைத்தொழிற்சாலைகளுக்கு கூலியாட்கள் கிடைக்காமல் போகின்றதாமே
அந்தோ! நமது தேசப் பத்திரிகைகள் கூறுவது சாதிபேதம் வைத்துள்ளக் கூலியாட்களையா அல்லது சாதிபேதம் அற்றுள்ளக் கூலியாட்களையா தெரியவில்லை.
அன்னிய தேசங்களுக்கு இத்தேசத்துக் கூலியாட்களை அனுப்பி விடுகிறபடியால் இவ்விடம் ஏற்படுத்திவரும் கைத்தொழிற்சாலைகளுக்கு கூலியாட்கள் கிடைக்காமல் மெத்த கஷ்டப்படுகிறார்களென்று சிற்சில பத்திராதிபர்கள் கூறுவது விந்தையாக விளங்குகின்றது. காரணம் இன்ன சாதியார், இனியசாதியாரென்று இதுகாரும் விளங்காமலிருக்கும் கனந்தங்கிய பச்சையப்பன் காலேஜில் கைத்தொழில் கற்பிக்கும் கலாசாலை இயற்றுவதற்காய் விளம்பரப் பத்திரிகை வெளியிட்டதுள் சாதிபேதம் வைத்துள்ளார்கள் மட்டிலும் அக்கலாசாலையில் வந்து கற்றுக்கொள்ளலாம், மற்ற சாதிபேதம் அற்றுள்ளவர்களுக்கு அதில் இடம் கிடையாதென்று பயிரங்கப்படுத்தி இருந்தார்கள்.
இத்தகைய பட்சபாதமுள்ளோர்கள் நாட்டி வரும் நெசிவுசாலைகளிலும், இயந்திரசாலைகளிலும் சாதிபேதம் அற்றோர்களை சேர்ப்பார்களோ, ஒருக்காலுஞ் சேர்க்கமாட்டார்கள். எவ்வகையாலென்பீரேல் அச்சாலைகளில் பிரதம உத்தியோகங்களில் அமர்ந்திருப்போர் ஆட்களை நியமிக்கும்போது நீரென்னசாதி - நான் கவரை, நீரென்னசாதி - நான் வேளாளன், நீரென்னசாதி - நான் ரெட்டி என்பார்களாயின் அவர்கள் யாவரையும் சேர்த்துக் கொள்ளுவார்கள். மற்றொருவனைக் கேட்குங்கால் அவன் எனக்கு சாதியில்லை என்பானாயின் அவன் பறையன் அவனுக்கு இங்கு வேலை கிடையாதென்று துரத்தி விடுவார்கள். அவர்களை மட்டிலும் ஏன் துரைத்திவிடுகிறீர்களென்று கேட்டாலே தங்களுக்கு சாப்பாடு கொண்டு வருவதற்கும், சலமுதலியன மொண்டு கொடுப்பதற்கும் இடைஞ்சலாகிவிடும். ஆதலால் அவர்களை சேர்ப்பதில்லையென்று திட்டமாகக் கூறுகின்றார்கள்.
ஈதன்றி பொதுவாய் பிரிட்டிஷ் ராஜாங்க உத்தியோகசாலைகளிலேயே இச்சாதி பேதமற்றவர்களை சேரவிடாமலும், நெருங்கவிடாமலும் தாழ்த்தி நாசப்படுத்திவந்தவர்களும், வருகிறவர்களுமானோர் தங்கள் சொந்தமாகியத் தொழிற் சாலைகளில் இவர்களைச் சேர்த்து சீவிக்கவிடுவார்களோ என்பதை அநுவத்திலறிந்துக் கொள்ளவேண்டியதேயாம். அதாவது நல்லத்தண்ணீரை மொண்டு குடிக்கவிடாத பொறாமெயுள்ளோர்களும் அம்மட்டர்களை சவரஞ் செய்யவிடாத பொறாமெயுள்ளோர்களும், வண்ணார்களை வஸ்திர பொறாமெய் உள்ளோர்களும், சுபாகபகாலபறை அடிப்போரை