பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 247

கூடாதென்பதாய் இராஜாங்கத்தோர் மாறுத்திரம் அளித்திருப்பதாகத் தெரியவருகின்றது.

இத்தகையாய் சிறுவர்கள்மீது அன்பு பாராட்டி கல்வி விருத்தியைத் தேடிய பெரியோர்கள் தங்களுக்குள்ளுள்ள தனவான்கள் யாவரையும் ஒன்றுகூட்டி பெருந்தொகையை சேகரித்து (டிப்பிரஸ்கிளா) சென்னும் எழிய சிறுவர்களுக்குப் புசிப்பளிக்கும் ஏற்பாட்டை முடித்துக் கொண்டு கருணைதங்கிய இராஜாங்கத்தோரை நோக்கி யாங்களெல்லோரும் ஒன்றுகூடி எழிய சிறுவர்களுக்கு அன்னமளித்து ஆதரிக்கின்றோம். தாங்கள் கிருபை கூர்ந்து (டிப்பிரஸ்கிளாஸ்) சிறுவர்களுக்கு நான்காவது வகுப்புவரையில் இலவசமாகக் (கம்பல்சரி எடிகேஷன்) கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுவார்களாயின் இவர்களது இதக்கம்போல் இராஜாங்கத் தோருமிதங்கி ஏழைகளைக் கல்வி விருத்தியில் ஈடேற்றுவார்கள்.

இத்தகைய இதக்கமின்றி இந்தியாவிலுள்ள சிறுவர்களுக்கெல்லாம் கம்பல்சரி எடிகேஷன் கொடுக்க வேண்டுமென்று வெறுமனே கேட்டபடியால் தனவான்களின் வாக்கை இராஜாங்கத்தோர் ஏற்பதற்கு ஏதுமில்லாமற் போயிற்று. ஏதுவாம் ஏழைகளுக்குப் புசிப்பளிக்குங் கருணை இவர்களுக்குத் தோன்றுமாயின் அதை அநுசரித்தே இராஜாங்கத்தோர் கருணை கல்வியளித்துக் காப்பார்கள்.

இத்தகையக் கேலியின்றி இந்தியாவிலுள்ள தனவான்கள் பிள்ளைகளுக்கும் ஏழைகள் பிள்ளைகளுக்கும் இலவசக்கல்வி அளிக்கவேண்டுமென்று கேட்பது நியாயமாமோ. இப்பெருஞ் செலவை நியாயமாக ஏற்றுக்கொள்ளும்படியானவர்கள் தேச பாதுகாப்புக்கும், சீர்திருத்தத்திற்கும் செலவிடும் இராணுவச் செலவையும் சிவிலியன்கள் செலவையும் அதிகமென்று கூற ஏற்படுவது யாது நியாயமோ விளங்கவில்லை. இராஜாங்கமும் ஆறுதலடையவேண்டும். ஏழைக் குடிகளும் சகல மக்களைப் போல் சீர்பெறவேண்டுமென்னுங் கனதனவான்கள் இராஜ விசுவாசமும் ஏழைகள் மீது கருணையும் வைப்பார்களாயின் எடுக்கும் முயற்சிகள் யாவும் நிறைவேறுவதன்றி எடுப்போரது பெருங் கீர்த்தியம் என்றென்றும் பிரகாசிக்கும். இதுவே தனவான்களின் செயலுமாகும்.

- 3:43; ஏப்ரல் 6, 1910 -


127. சுயராஜ்ஜியம் சுயராஜ்ஜியம் என்னும் பத்திரிகா கூச்சல்களும் சுயராஜ்ஜியப்பேச்சுகளும்

நமது இந்திய சோதிரர்களில் இரண்டொருவர் மனோபிராந்திகொண்டு சுயராட்சியம் வேண்டுமென்று கூச்சலிடவும் அவர்களது அந்தரங்கக்கருத்து இன்னதென்று அறியாத சிலக்கூட்டத்தோர் அவர்களைப் பின்பற்றி சுயராட்சியமென்னும் கூச்சலிடுவதையும் யோசிக்குங்கால் (கோவிந்தம்) போடுவோர் கூச்சலுக்குசமதையாய் இருக்கின்றது.

எவ்வகையிலென்பீரேல் நமது தேசத்தோரிற் சிலர் பிரேதமெடுத்து செல்லுகையிலும், சிவாலயங்களுக்குப் போம்போதும் யாவரேனும் ஒருவர் கோவிந்தமென்னுங் கூச்சலிடுவாராயின் கூடச் செல்லுவோர் யாவரும் கோவிந்தமென்று கூச்சலிடுவது வழக்கமாகும். அவர்களுள் கோவிந்தமென்று முதற்கூச்சலிட்டவருக்கும் அதன் காரணம் தெரியாது, அவரைப் பின்பற்றி சொன்னவர்களுக்கும் அதன் காரணம் தெரியாது. இக்கோவிந்தமென்னும் வார்த்தையின் கூச்சலால் ஓர் சுகமுங் கிடையாது, துக்கமுங்கிடையாதென்பது திண்ணம்.

சுயராஜ்ஜியமென்னும் வார்த்தையின் கூச்சலால் யாதொரு சுகமுங் காணாது போவதுடன் கலகமும் துக்கமும் பெருகிக்கொண்டே வருகின்றதென்பது அநுபவக் காட்சியேயாம். அதாவது சுயராஜ்ஜியமென்னும் பத்திரிகைகளை ஏற்படுத்தியிருந்தோர் பட்டபாடுகளையும் சுயராஜ்ஜிய கூச்சலிட்டுத்திரிந்தோர் துக்கக்கேடுகளையும் பத்திரிகைகளின்வாயலாகக் கண்டதுடன் பிரத்தியட்ச