பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxx / அயோத்திதாசர் சிந்தனைகள்


“இந்தியா என்னும் பத்திரிகையில் ஒருவர் தங்களுக்காக கல்விச்சாலை ஏற்படுத்த வேண்டும் என்றும் இதில் பஞ்சமர்களுக்கென்று வேறு தனிப்பட்ட பள்ளிக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்... - இப்படிப்பட்டவர் சுயராட்சியம் பெற்றுக் கொண்டால்...(தமிழன் -17.6.1908)

“சாதியை ஒழித்து சமமாக நடத்துவார்களா?” என்று கேட்டு “தீண்டக்கூடாது என்ற இடுக்கண் செய்த வகுப்பினனே தற்காலம் ஏழைபிள்ளைகளின் பள்ளிகளில் ஆசிரியர்களாக அமர்ந்து உண்ணவும் அருந்தவும் செய்கிறார்கள்” (தமிழன் - 16.9.1908) என்பதையும் எடுத்துக் கூறுகிறார்.

தேசத்தைச் சீர்திருத்த வேண்டும், சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவோரை அயோத்திதாசர் நம்பத் தயாராக இல்லை என்று தெரிகிறது. “சாமிக்கதை சொல்லும் போதே சூத்திரன் கேட்கப்படாது என்று விரட்டும் பாவிகள் சாப்பாடு போடும்போது யாருக்கு இட்டுயாரைவிலக்குவார்கள் என்பது தெரியாதோ” (தமிழன் -3.6.1908) என்று சொல்கிறார். நாலாம் வருணத்தாரான சூத்திரர்களுக்கே இந்த நிலையென்றால், சூத்திரர்களுக்கும் கீழே உள்ளவர்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்பதை இக்கருத்தில் காணலாம்.

பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் உழைத்துச் சாப்பிடுகிறவன் எந்தவிதத்தில் தாழ்ந்தவன் என்று அயோத்திதாசர் சற்றுக் கடுமையாக கேட்பது நியாயமானதேயாகும்.

“இந்த தேசத்தில் பிச்சை எடுப்பவன் பெரிய சாதி என்றும் உழுது உண்பவன் சின்ன சாதி என்றும் சோம்பேறி செய்து கொண்டு வருகிறார்கள் (தமிழன் - 4.3.1908)

பணமுள்ளோர் பெரிய சாதி,பணமில்லாதவன் சின்ன சாதி, உழைப்பவர்கள் சின்ன சாதி, சோம்பேறிகள் பெரிய சாதி, மத சார்பாக இருப்பவர்கள் உயர்ந்த சாதியார்கள், என்று தங்கள் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்ட கதையாவும் பொய் என்று கூறி யார் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் யாவரும் தாழ்ந்த சாதியார் என்று வருகின்றது” (தமிழன் - 25.121907). இது எந்த விதத்தில் நியாயம் எத்தகைய அறிவீனம் என்று அவர் மனக்கசப்புடன் கேட்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்விதான்!

“16.9.1908 அன்று கூடிய நகர சீர்திருத்த சங்கத்தாருள் மயிலாப்பூர் சுடலை விஷயமாக நடந்த ஆலோசனையில் ஸ்ரீ சேஷாச்சாரி மறுப்புக் கூறியிருக்கிறார். சுடலைக்கு போகும்போது வழியில் பறைச்சேரி இருக்கிறபடியால் அவ்வழியில் உயர்ந்த சாதியார் போக அஞ்சுவார்கள். இப்பிராமணர் என்போர் பறையர் என்போர் வாழும் இடங்களுக்குப் போவார்களானால் அடித்துத் துரத்திச் சாணச் சட்டியை உடைப்பது பழைய வழக்கமாயிருந்தது. அந்த பயத்தைக் கொண்டு உயர்ந்த சாதியார் பறைச் சேரியின் வழியாகப் போவதற்கு அஞ்சுகிறார்கள்” (தமிழன் -23.9.1908) என்று அயோத்திதாசர் குறிப்பிடுவதிலிருந்து இந்த இரண்டு வகுப்பினருக்குமிடையே நீண்ட காலமாகப் பகைமை இருந்து வருவதாகத் தெரிகிறது. இதே செய்தி புலவர் திரிசிபுரம் ஆ. பெருமாள் பிள்ளை அவர்கள் எழுதிய ஆதிதிராவிடர் வரலாறு என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது (அ. பெருமாள் பிள்ளை , ஆதிதிராவிடர் வரலாறு, 1922).

இதே செய்தியை அயோத்திதாசர் வேறொரு வரலாற்று நிகழ்ச்சியிலும் கூறியிருக்கிறார். தமிழ் பற்றுகொண்ட எல்லீஸ் ("Ellis, Francis whyte-arrived in India in 1796. He was a member of the Madras Civil Service. ... died under tragic circumstances in 1819... During this short period he early devoted himself to the study of the language, history and antiquities of the land .... Ellis' outstanding work which has come down to us is his commentary on the Kural... It does reveal to remarkable degree the author's extensive knowledge of Tamil literature".K. Meenakshi sundaram- The contribution of European scholars of Tamil, University of Madras.p. 38-40) என்ற ஆங்கிலேயர் தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேர்த்துக் கொண்டிருந்தார். திருக்குறளை அவரிடம் யாரும் கொடுக்கவில்லை. அவருடைய