அரசியல் / 257
இவ்வெழிய மக்களோ கபடமற்றவர்களாதலின் தங்கள் சத்துருக்களின் மத்தியில் பூமியின் சுகம்பார்க்கப்போய் உள்ளசுகமுங்கெட்டு வாழ்ந்த ஊரையும்விட்டு வேறு தேசஞ் சென்று சுகித்துவருகின்றார்கள். சாதிபேதம் வைத்துள்ளவர்கள் பூமிகளை சாதிபேதமில்லார் உழுது பயிர் செய்து சுகமளித்து வந்தபோதிலும் அவருக்கு அரைவயிற்றுக் கஞ்சேனும் சரிவரக்கொடாது அவர்கள் செய்து வருங் கஷ்டவூழியத்திற்கு நன்றி பாராட்டாமலும் இருக்கின்றவர்கள் மத்தியில் சொந்த பூமியின் சுகமனுபவிப்பது மிக்க கஷ்டமேயாம்.
பூர்வக் குடிகளாம் திராவிடர்களை தாழ்த்தி நாசமடையச் செய்வதற்கே சாதிபேதத்தை உண்டு செய்துண்டவர்களாதலின் அவர்கள் சொந்த பூமிகளை வைத்துப் பயிர்செய்யவும் சுகம் பெற்று வாழ்கவும் மனம்பொறார்களென்பது திண்ணம்.
அதற்குப் பகரமாய்க் கருணைதங்கிய மிஷெநரி துரைமக்கள் இவ்வேழைக் குடிகளை சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவருவதைக்கண்டு அவர்கள் மனஞ்சகியாது அன்னோரை பத்திரிகைகளின் வாயிலாகவும், கூட்டங்களிலும் நிந்தித்துவருவதே சான்றாம்.
இப்போதும் சிலபூமிகளைவைத்துவந்தவர்கள் கிணறுகள் வெட்டி பூமியின் சுகம் பெறுவதற்கு கருணைதங்கிய ராஜாங்கத்தோர் பணவுதவி செய்துவருகின்றார்களென்றறிந்து (பாரம்) என்னும் கடிதம்வாங்கி எழுதிக் கொடுப்பது முநிஷிப்பிடமேனும் கணக்கனிடமேனும் போய்க்கேட்பதால் நெறுங்கிப் போகலாகாது. அவ்வகை நெறுங்கி அப்பாரத்தைக் கேட்டபோதும் உடனே கொடுப்பது கிடையாது. அதற்கு நாலைந்துநாளலைந்து அக்கடிதத்தை வாங்கி எழுதிக் கொடுக்கும்போது உத்தியோகஸ்தரை சந்தோஷப்படுத்திக் கேட்டால் மட்டிலும் காரியம் கைகூடும் சந்தோஷஞ் செய்யாவிட்டாலோ பாரம்வாங்கப்போகிறதில்லை. கிணறும் வெட்டப்போகிறதில்லை. அவ்வகை எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பணம் வாங்கினாலோ நூறு ரூபாய் வாங்குவதில் ஐம்பது ரூபாய் வீடு கொண்டுபோய் சேருவது அதிர்ஷ்டமாம். அவ்வைன்பது ரூபாயில் கிணறு வெட்டுவதும், நீர் காண்பதுமில்லாமல் அல்லலடைவதுடன் வாங்கிய பணத்தையும் கொடுப்பதற்கு வழியற்று நசிந்துபோகின்றார்களாம்.
ஆதலின் கருணை தங்கிய ராஜாங்கத்தார் இவ்வேழைக்குடிகளுக்கு பூமிகளை கொடுக்கும்படியான சட்டங்களை வகுத்துங் கஷ்டம். கிணறுவெட்டி நீர்பாய்ச்சி நலனடையப் பணவுதவி செய்தும் வீணாக முடிகிறபடியால் இவ்வெழியக் குடிகளின் மீது கருணைதங்கிய துரைமக்கள் கண்ணோக்கம் வைப்பது காட்சியும் அநுபவமுமாகும். அங்ஙனமின்றி சாதிபேதம் வைத்துள்ள உத்தியோகஸ்தர்களால் சட்டங்கள் சரிவர நிறைவேறுவதும் கஷ்டம் பூமிகள் விருத்தியடைவதுங் கஷ்டம். குடிகள் சுகம்பெறுவதும் கஷ்டம், கஷ்டமேயாம்
- 3:49; மே 18, 1910 -
136. இந்திய தேசத்திய விருத்தியும் அதன் வரவுசெலவுகளும்
இந்திய தேசத்தில் ஆயிரத்தி எண்ணூற்றி ஐம்பத்தியாறு, ஐன்பத்தி ஏழாம் வருடங்களில் நமது ராஜாங்கத்தோருக்கு வந்த வரவு ரூபா முப்பத்தியோர் கோடியே எழுபது லட்சமென்றும் அதே வருடங்களில் அவர்களுக்கு செலவாயரூபாய் முப்பத்தியோர் கோடியே எண்பது லட்சமென்றும் இந்திய காரியதரிசியாரவர்களின் அறிக்கை சால் தெரியவருகின்றது.
இவ்வகையாக இராஜாங்கத்தார் வரவைமிக்க யோசியாது தேசவிருத்தி, வித்தியாவிருத்தி, தானியவிருத்தி, பிரஜாவிருத்தியைக் கருதி செலவை அதிகமாகச் செய்துவந்ததில் பிரஜைகளுக்கு மிக்க அநுகூலங்கள் உண்டாயதால் ஆயிரத்தி தொளாயிரத்தியாறு, தொளாயிரத்தி ஏழில் வந்தவரவு ரூபாய் நூற்றியெட்டு கோடியே நாற்பது லட்சமும் தேச விருத்திக்கு செலவாய ரூபாய்