உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வூழியஞ் செய்ய நேர்ந்துவருகின்றது. இத்தகைய துரைமக்கள் அன்பற்றச் செயலால் ஊழியர்களு மன்பற்று தாய்தந்தையரென்றெண்ணியிருந்த விசுவாசமுமற்று இரவும் பகலும் கட்டிக்கார்த்துவருஞ் செயலுமற்று துரைமக்கள் பொருட்களைக் காப்பாற்றவேண்டிய பயமுமற்று அஜாக்கிரதா வழியஞ்செய்துவருகின்றார்கள். இத்தகையாய் ஆங்கிலேய துரைமக்களுக்கு இவ்வூழியர் மீதிருந்த வன்பும், இவ்வூழியர்களுக்கு துரைமக்கள் மீதிருந்த வன்பும் நாளுக்குநாள் மாறுபட்டுவருவதைக் கண்டு வரும் இவர்களுடைய சத்துருக்கள் மறுபடியும் இவர்களைப் பூர்த்தியாகக் கெடுத்து பழய நிலைக்குக் கொண்டுவருவதற்கெண்ணி தங்கள் சுதேசியக்கூட்டத்திற் சேர்க்கத்தக்கயெத்தனங்களைச் செய்துவருகின்றார்கள்.

இவர்களும் அவர்கள் வார்த்தையை நம்பி சேர்ந்துவிடுவார்களாயின் துரைமக்களுக்குக் கோபம்பிறந்து இன்னுந் தாழ்த்திவிடுவார்கள். நாமும் அவர்களை சீர்திருத்துவதுபோல் சேர்த்து சரியாகப் பாழ்படுத்தலாமென்று பார்த்திருக்கின்றார்கள். இத்தகைய சத்துருக்களின் மித்திரபேதங்களை நோக்குங்கால் நமது மனம் திகைக்கின்றது. காரணமோவென்னில் ஆங்கிலேய துரைமக்களுக்கு வூழியர்கள் மீதிருந்த அன்பும் நம்பிக்கையும் குறைந்துவருவதும் ஊழியர்களுக்கு ஆங்கிலேயர்மீதிருந்த வன்பும் ஆசையும் மாறுதலடைந்து வருவதுமாகியச் செயல்களைக் காண்பதினாலேயாம் இப்பவும் பூர்வ ஆங்கிலேயர்கள் அன்பும் ஊழியர்களின் விசுவாசமும் மாறாமலிருக்க வேண்டுகிறோம்.

- 4:7; சூலை 27, 1910 -


147. யார்வீட்டு சொத்திற்கு யார் அத்து நியமிப்பது

தற்காலம் இத்தேசத்தில் சுதேசியம் சுதேசியமென்று கூட்டமிட்டுத் திரிவோருடன் சகலருக்குத் தங்களை சுதேசிகளென்று சொல்லாமலே விளங்குமென்று எண்ணித் திரியும் சாதிபேதமற்ற திராவிடர்கள் சேராமலும் அவர்கள் கூட்டுறவை நாடாமலும் இருப்பதைக் கண்டவர்களிற் சிலர் சாதிபேதமற்ற திராவிட சைவ திருப்பணித் தொண்டர்களையும் வைணவ திருப்பணித் தொண்டர்களையும் தங்கடங்கட் சிலாலயங்களின் கருடஸ் தம்பம் வரையில் வரும்படியான உத்திரவளிக்க வேண்டுமென்னுங் கூட்டங்கூட்டி பேசுவதாகத் தெரிந்து வியப்புறுகிறோம்.

அதாவது பூர்வ பௌத்தமடங்கள் யாவையும் சிவாலயம், விஷ்ணுவாலயமென நிருமித்துக் கொண்டவர்கள் அக்கட்டிடங்களுக்கு சுதந்திரக்காரர்களாகும் பெளத்தர்களை வாயற்படி வரையிலும் வரலாம், கருடஸ்தம்பம் வரையிலும் வரலாமென்னும் உத்திரவளிக்க யோசிப்பது என்ன அதிகாரமோ என்பதேயாம். யீதன்றி சாதிபேதமற்ற திராவிடர்களுட் பெரும்பாலோர் ஆங்கிலேய அரண்மனை உத்தியோகமாகும் துரைமக்கள் திருப்பணிச்செய்து தக்க சம்பளங்கள் பெற்று வேண உடையும் வேண்டிய புசிப்பும் புசித்து சுகசீவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் அத்தகைய துரை மக்கள் திருப்பணியில் சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு அநாதிமுத்தனுக்குத் திருப்பணிச் செய்யவேண்டும் என்னும் பொய் மொழி கூறி பொருள் சம்பாதித்துத் தானும் தனது பெண் பிள்ளைகளும் புசித்து உலாவுவதுடன் வாயற்படி கடந்து கருடஸ்தம்பம் வரையிலும் போகலாமென்றுங் குதூகலிக்கின்றார்களாம்.

கருணைதங்கிய துரைமக்களிடம் திருப்பணி செய்து சம்பாதிக்கும் பணங்களை விறுதாவாம் வெறுப்பணிக்குச் செலவு செய்து வீணர்களைத் தின்று ஊதவைப்பதால் யாதுபயன். சமயோசிதமாக தங்களுக்குப் பொருளளித்து போஷிக்கும் வரையில் பூஷிப்பவர்கள் பொருள் கொடாவிடில் தூஷிப்பார்களென்பது திண்ணம். அத்தகையப் போஷணைச்செய்து தூஷணைப்பெறுவதினும் துரைமக்களுக்குத்திருப்பணிச் செய்து சம்பாதிக்கும்