அரசியல் / 281
அவர்கள் செய்துவரும் செயல்களும், பேசிவரும் நியாயங்களும், பட்டுவரும்பாடுகளும் நாஷனலென நன்கு விளங்குகின்றதே.
ஒற்றுமெய்பேதமும், சாதிபேதமும், சமய பேதமும் வேண்டும். நாஷனல் காங்கிரசென்னும் பெயரும் வேண்டுமென்றால் பொருந்தமோ, ஒருக்காலும் பொருந்தாவாம்.
நாஷனல் என்னும் பெயர் பொருந்தவேண்டுமாயின் பிரிந்துக்கொள்ள எத்தனித்துள்ள நாயுடு கூட்டத்தாரும் பிரியாமலிருத்தல் வேண்டும். ஏழைகளாயுள்ள அறுபதுலட்ச மக்களும் ஈடேறவேண்டுமென்று முயன்று தன்னவரன்னியர் என்னும் பட்சபாதம் பாராமலும், ஏழைகள் கனவான்ளென்றெண்ணாமலும், பெரியசாதி சிறிய சாதியென்று பாராமலும், உள்சீர்திருத்தம் புறசீர்திருத்தமென்றுன்னாமலும், ஏழைகள் முன்னேறும் காரியங்களை முடித்தல் வேண்டும். அத்தகைய செயல் கொண்டே யாதார்த்தத்தில் இவர்கள் நாஷனல் காங்கிரஸ் கூட்டத்தாரென சகலரும் கொண்டாடுவார்கள். கனந்தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியோரும் ஆனந்திப்பார்கள்.
- 4:14; செப்டம்பர் 14, 1910 -
155. சௌத் ஆப்பிரிக்க இந்தியக் குடிகளும் பிரிட்டிஷ் ஆட்சியும்
தற்காலம் சௌத் ஆப்பிரிக்காவிற்குக் குடியேறியிருக்கும் இந்தியக் குடிகள் மெத்த அல்லற்படுகின்றார்களென்றும், அதற்காக இந்தியாவிலுள்ளக் குடிகளிற் சிலர் பரிந்து பாடுபடுகின்றார்களென்றும் பிரிட்டிஷ் துரைத்தனத்தார் செளத் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியக்குடிகள் மீது இதக்கம் வைக்கவேண்டுமென்றும் முறையிட்டு வருகின்றார்களாம்.
அந்தோ! அந்த இந்தியக்குடிகள் சௌத் ஆப்பிரிக்காவை பிரிட்டிஷ் துரைத்தனத்தார் கைப்பற்றுவதற்கு முன்பு குடியேறியவர்களா, கைப்பற்றியதற்குப் பின்பு குடியேறியவர்களா வென்பதை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவர்களாயிருக்கின்றோம். ஏனெனின்ரேல், பிரிட்டிஷ் துரைத்தனத்தார் அத்தேசத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு அவ்விடங் குடியேறி இருப்பார்களாயின் அத்தேசத்தார் இந்தியரை அவ்விடம் விட்டு அகற்றவேண்டிய அவசியம் இராது.
அல்லது பிரிட்டிஷ் துரைத்தனத்தார்க் கைப்பற்றியபின்னர் இந்தியக் குடிகள் அவ்விடம் போயிருப்பார்களாயின் பிரிட்டிஷ் ஆட்சியார் இந்தியருக்குண்டாம் இடுக்கங்களை நீக்கிக் கார்ப்பதற்கு இதக்கம் வைப்பார்கள். காரணம் இந்தியக் குடிகளோ பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டவர்கள். அத்தகையோர் தங்கள் ஆட்சியின் எத்தேசத்திருப்பினும் அவர்களை ஆதரிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையதேயாகும். அங்ஙனமின்றி செளத் ஆபிரிக்காவை பிரிட்டிஷ் ஆட்சியார் கைப்பற்றுவதற்கு முன்னரே இந்தியக்குடிகள் அவ்விடங் குடியேறி சௌத் ஆப்பிரிக்கருடன் பழகி சுகித்திருந்தவர்களாக விளங்குகின்றது. அவ்வகை சுகித்திருந்தவர்களை பிரிட்டிஷ் ஆட்சியார் அத்தேசத்தைக் கைப்பற்றி மறுபடியும் அவர்கள் கையில் ஒப்படைத்து விட்டபோது அத்தேசத்தோர் இந்தியரை வெறுக்கவேண்டிய காரணமும் அவர்களை அத்தேசத்தை விட்டு அகற்றவேண்டிய காரணமும் கண்டறிந்தே பேசல்வேண்டும்.
யாதொரு களங்கமுமின்றி இந்தியர்களை சேர்த்து வைத்துக் கொண்டிருந்த சௌத் ஆபிரிக்கர்களுக்கு இந்தியர்கள் மீதுண்டானக் களங்கங்கள் என்னை. இவர்கள் முன்பு குடியேறியகாலத்திலிருந்த ஒடுக்க நிலையில் சுகித்திருப்பார்களாயின் இவர்களுக்கு அவர்கள் சட்டங்களும் நிபந்தனைகளும் குறிநெறிகளும் வகுக்கவேண்டிய காரணங்களென்னை. அத்தேசத்துக்குரியோர் ஏதோ ஓர் சந்தேகங்கொண்டு குறிநெறிகளையும் நிபந்னைகளையும் வகுத்துவைத்தபோதினும் அத்தேசத்திற்கு யாதொரு சுதந்திரமுமற்ற இந்தியர்கள் அந்நிபந்தனைகளுக்கு ஒடுங்கி வாழ்கமாட்டோ மென்று எதிர்த்துநின்ற காரணங்களென்னை. அத்தேசத்தோர் சட்ட திட்டங்களுக்கும் குறி