282 / அயோத்திதாசர் சிந்தனைகள்
நெறிகளுக்கும் அடங்கி வாழ்க விருப்பற்றவர்கள் அத்தேசத்தை விட்டு தங்களுக்குத் தாங்களே விலகி விடுவது அழகாகும்.
அங்ஙனம் விலகாது பிரிட்டிஷ் ஆட்சியார் தங்கள் மீது இதக்கம் வைக்கவில்லை என்று பழிகூறுவது வீண் மொழியேயாம்.
முன்போன்று சுகித்து அவ்விடம் வாழ்கப் பிரியமுடையவர்கள் அத்தேசத்தோர் நிபந்தனைகளுக்கும் குறி நெறிகளுக்கும் அடங்கி வாழ்க்கை பெருங்கால் தங்களது முன்வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை முரண்பட்டு அதிக துன்பத்துக்குள்ளாக்குமாயின் சகல இந்தியகுடிகளும் ஒன்றுகூடி அத்தேச அதிகாரிக்கு விளக்கி வேண்டிக்கொள்ளுவார்களாயின் அவர்களே அவ்விடுக்கங்களை நீக்கி சீர்திருத்துவார்கள். அவ்வகை சீர்திருத்தாது இன்னும் இடுக்கத்திற்குள்ளாக்குவார்களாயின் அக்காலக்குறைகளை பிரிட்டிஷ் ஆட்சியாருக்குத் தெரிவித்து வேண்டிக்கொள்ளுவதாயின் இந்தியக் குடிகளின் இடுக்கத்திற்கு இதங்கி ஏதோ சில முயற்சிகளை செய்வார்கள். அங்ஙனமின்றி ஈட்டிமுனையில் உதைப்பதுபோல் அத்தேச அதிகாரிகளின் சட்டதிட்டங்களை எதிர்த்து அவர்கள் கோரிக்கைக்கு மாறுபட்ட இந்தியக்குடிகள் செளத் ஆப்பிரிக்காவில் மிக்க வாதைப்படுகின்றார்களென்று இந்தியதேச விந்தியர்கள் கூறுவது விந்தையென்றே கூறல்வரும்.
காரணம் ஈட்டியின் முனையின் கூரறிந்தும் அதை உதைக்கக் குத்துப்பட்டவிடம் இரணமுண்டாகி துன்பமடைகின்றார்களென்பதுபோல் இராஜநீதியென்று அறிந்தும் அதனுக்கு அஞ்சாது வீராப்பிட்டு துன்பமடையுங்கால் வாதைப்படுகின்றோம், வாதைப்படுகின்றோமென்று கூறுவதும், அவர்களைச்சார்ந்தோர் வாதைப்படுகின்றார்கள், வாதைப்படுகின்றார்களென்று கூறுவதுமாகிய மொழிகளை அன்னிய ராஜாங்கத்தோர் கேட்கினு மேற்பரோ, ஒருக்காலும் ஏற்கார்கள். காரணம், அன்னியராஜாங்க சட்டத்தின் எதிர்ப்பே தங்கள் ராஜரீகத்திற்கும் ஆகுமென்பது கருத்தாம். ஆதலின் சௌத் ஆபிரிக்காவின் வாழ்க்கையே பிரியமுள்ள இந்தியக் குடிகள் அத்தேசத்து அதிகாரிகளின் சட்டதிட்டங்கட்கடங்கி வாழ்வதே வாழ்வாகும்.
- 4:14: செப்டம்பர் 14. 1910 -
156. அதிகார உத்தியோகம் யாருக்களிப்பது?
இத்தேசத்தை ஆளுகைபுரிவோர் யாரோ அவர்களது குணாகுணங்களையும் செயல்களையும் நன்கராய்ந்து அவர்களது ஒழுக்கத்திற்கும் செயலுக்கும் தக்கவாறு தெரிந்தெடுத்து அவர்களுக்கே அதிகார உத்தியோகம் அளிப்பது அழகாம்.
அங்ஙனமின்றி அரசாங்கத்தோர் ஒழுக்கத்திற்கும் செயலுக்கும் மாறுபட்டுள்ளவர்களுக்கு அதிகார உத்தியோகங்களை அளிப்பதாயின் அவர்களுக்குள்ள மாறுபட்டச்செயலால் இராஜாங்கத்திற்கு ஆறுதலில்லாமற்போம். ஆதலின் நம்மெயும் நந்தேயத்தையும் ஆண்டு ரட்சித்து வரும் பிரிட்டிஷ் ஆட்சியரின் ஒழுக்கமும் செயற்களும் யாதெனில், சகல சாதியோர் மீதினும் பேதமற்ற அன்பு பாராட்டி குடிகளுக்கு வருந் துன்பங்களை தங்களுக்கு வந்த துன்பம்போல் கருதியும், குட்டிகளுக்கு வரும் வியாதிகளை தங்களுக்கு வந்த வியாதிபோல் இதங்கியும், குடிகளுக்கு நேரும் இடுக்கங்களை தங்களுக்கு நேர்ந்த இடுக்கம்போல் பாவித்தும், குடிகளைக் கண்களைப் போலும் தாங்கள் தங்கள் கண்களின் இமையைப்போலுமிருந்து பாதுகார்த்து சுகசீரளித்து வருகின்றார்கள். இத்தகைய நீதியும், அன்பும், நெறியுமிகுத்த அரசாட்சியில் அத்தகைய ஒழுக்கமும் அன்பும் செயலும் அமைந்தவர்களுக்கே அதிகார உத்தியோகங்களை அளிப்பதாயின் சகல குடிகளும் சுகச்சீர்பெற்று ஆனந்த வாழ்க்கை அடைவார்கள்.
தற்காலம் தோன்றியுள்ள இந்திய வாழ்க்கைக் குடிகளுக்கோவெனில், பிரிட்டிஷ் ஆட்சியோருக்கு அமைந்துள்ள ஒழுக்கமும் அன்பும் செயலும்