அரசியல் / 303
தலையெடுக்காது துன்பஞ்செய்வோர்களைத் தடுத்தாண்டு ரட்சிப்பார்கள். இதுவே நமது பிரிட்டிஷ் ஆட்சியாரின் செயலேயன்றி கிறீஸ்தவர்கள் மீது மட்டிலுங் கவர்ன்மெண்டாருக்குக் கருணையுண்டு, ஏனைய மதத்தோர்மீதுக் கருணையில்லை என்பது பிசகேயாம்.
- 4:25; நவம்பர் 30, 1910 -
172. இந்திய தேச சென்செஸ் கமிஷனராகும் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் துரையவர்கள்
இம்முறை குடிமதிப்பெடுக்குங்கால் இந்துயென்பவர் யார், இந்து அல்லாதவர்களென்பவர் யார் என்பதைக் கண்டறிவதற்குக் குடிகளை ஆறுவகைக் கேழ்விக்கேழ்க்கவேண்டிய எத்தனஞ் செய்திருக்கின்றார்.
அதாவது இந்துவென்று ஓர் மனிதன் சொல்லுவானாயின் அவன் இந்துக்களின் முக்கிய தேவதைகளைத் தொழுகின்றதுண்டா. தொழுகின்றேனென்பானாயின் அவர்கள் கோவிலுக்குள் பிரவேசிக்கும் சுதந்திரமுண்டா; உங்கள் சுபா அசுபகாலங்களில் இந்துக்குரித்தாய பிராமணர்கள் வருவதுண்டா; அல்லது வேறு சிலர் வருவதுண்டா; சுத்தசாதிகளென்போர் உங்களிடம் ஜலபானஞ் செய்வதுண்டா; சுத்தசாதிகளென்போர் உங்களை நெருங்கித் தீண்டிக்கொள்ளுவதுண்டா என்னுங் கேழ்விகளேயாம்.
இவைகள் இத்தேசத்தோரைக் கேட்கும் முக்கியக் கேழ்விகளும், மேலாய கருத்துகளுமேயாம். காரணம் இத்தேசத்தோருட் சிலர் தங்களை உயர்த்திக்கொண்டு ஆறுகோடிமக்களைத் தாழ்த்தி அப்புறப்படுத்தி அலக்கழித்து வருவதுடன், அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசித்துவருகின்றபடியால் இந்துக்களிலிருந்து இவர்களை அப்புறப்படுத்தி அவர்களுக்குள்ள சுதந்திரமும், அவர்களுக்குள்ள சுகமும் இவர்களுக்கும் அளித்து தங்களுடைய ஆட்சியில் சீர்படுத்த வேண்டுமென்பதேயாம். இவ்வகைப் பிரிக்காமல் இந்துக்களுடன் சேர்த்துவைப்பதினால் இந்துக்கள் யாவரும் தங்கள் சமயம் நேர்ந்தபோது இவர்கள் தங்களைச் சேர்ந்தவர் அவர்களுக்கு வேண்டிய குறைகளை நாங்கள் அளித்து ரட்சிப்பவர்களென்று கூறித்திரிகிறதும் தங்கள் காரியம் முடிந்துவிட்டால் தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி நசித்துவருவதே இந்துக்களென்போர் இயல்பாதலின் அவர்கள் இதக்கமற்றச் செயலைக்கண்ட இங்கிலீஷ் துரைத்தனத்தார் சாதிபேதமற்ற ஏழைக்குடிகளை இந்துக்களைவிட்டு அப்புறப்படுத்தி ரட்சிக்கத்தக்க நன்னோக்கங் கொண்டுவிட்டார்கள்.
ஏழைகளின் ஈடேற்றத்தையும் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் நன்னோக்கத்தையுங் கண்டுகொண்ட இந்துக்கள் அவர்களது தன்னோக்கத்தைக் கெடுப்பதற்காக இந்துக்களென்றால் சகலரும் இந்துக்களென்றும் இந்து என்பவர்களை தடுப்பதில்லையென்றும் இந்து என்போரை யாங்கள் பிரிவினையில்லாமல் பாவித்திருக்க, இராஜாங்கத்தோர் பிரித்துவிடுகின்றார்களென்று வீண் பகட்டுப் பகட்டுகின்றார்கள். பொறாமெய் மிகுத்தோர்களால் பறையர்களென்று அழைக்கப்பட்டக் கூட்டத்தார் கோர்ட்டுகளிலேனும், டெத் அண்டு பர்த் ரிஜிஸ்டிரேஷன் ஆபீசுகளிலேனும், உத்தியோக சாலைகளிலேனும், பிளேக் ஆபீசுகளிலேனும் சென்று தங்களை இந்துக்களென்று சொல்லுவார்களாயின் அவர்களை மறுத்தும் பயமுறுத்தியும் நீங்களிந்துக்களென்றால் உங்கள் சாதி என்னவென்றுகேட்பதும் எங்களுக்கு சாதி இல்லையென்று கூறுவார்களாயின் ஏழைகளை இன்னும் பயமுறுத்தி உன் பாட்டன் சாதி என்ன, பூட்டன் சாதி என்னவென்று கேட்டு இவர்களால் பொறாமெகொண்டு பறையரென்றழைக்கும் பெயரையே வற்புறுத்திச் சொல்லவைத்து வாதிக்கும்படியானவர்களும், கோவிலுக்குள் இன்னின்ன சாதியார் வரப்படாதென்று எழுதிவைத் திருப்பவர்களும், பாப்பானுக்கு வேறு தெய்வம் பறையனுக்கு வேறுதெய்வமென்று பாடித்திரிகின்றவர்களும், பறையனே பிணத்திற்கு ஒப்பானவன், பிணத்தைக் கண்டாலும் தொட்டாலும்