318 / அயோத்திதாசர் சிந்தனைகள்
விளங்குகின்றபடியால் தேசத்தோர் பட்டப் பெயரைக் கருதாது, வித்தியா விருத்தி, விவசாய விருத்தி வியாபார விருத்தியில் நிலைப்பார்களாயின் அவரவர்கள் திரவிய சம்பத்தைப் பெறுவதுடன் தங்கள் தேசத்தோரையுங் காப்பாற்றி புறதேசத்தோரையும் பாதுகாப்பார்கள்.
நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோரும் இதுவிஷயத்தைக் கவனித்தல் வேண்டும். அதாவது இராஜாங்கத்தொழில்களில் பெரியபட்டம் பெற்றவர்களுக்கே பெரிய உத்தியோகங்கள் கொடுக்கப்படுமென்னும் ஓர் விதியை விதித்துள்ளபடியால் சகலரும் பெரியப்பட்டம் பெறவேண்டுமென்னும் அநாவிருத்தியில் நோக்கங்கொண்டு ராஜங்க உத்தியோகமே பெற வேண்டுமென்னும் ஆவலுடையவர்களாகி வித்தியாவிருத்தி, விவசாயவிருத்தி, வியாபார விருத்தி இவைகளை மறந்துவிட்டார்கள். இராஜாங்கத்தோர் பெரிய பட்டத்தோரை விரும்பிய விஷயத்தில் வித்தையும், வியாபாரமும், விவசாயமும் விருத்தி பெருவதற்கு ஏதுவற்று பெரியபட்டம் பெற்றோர்களே பெருகி உத்தியோகம் கிடைப்பதற்கு இடமிராது பிரிட்டிஷ் ராஜாங்கத்தையே வோட்டிவிட்டு தங்கள் சுகத்தைப் பார்க்கும்படியான இராஜதுரோகிகளாகின்றார்கள். கருணைதங்கிய ராஜாங்கத்தோர் பெரியபட்டங்களை நோக்காது பிள்ளைகள் கலாசாலைகளில் வாசிக்கும்போதே நியாயாதி விஷயங்களிலும், விசாரிணை விஷயங்களிலும், விவசாய விஷயங்களிலும், இஞ்சனியரிங் விஷயங்களிலும், ஆர்ட்டிஸ்ட் விஷயங்களிலும், மற்றும் இராஜாங்க வுத்தியோகத்திற்கானத் தொழில்களிலும் யார்யார் எத்தகையத் தொழிலில் முயற்சியும் ஊக்கமும் உடையவர்களாயிருக்கின்றார்களோ அப்பேர்க்கொத்தப் பிள்ளைகளைத் தெரிந்தெடுத்து அதற்குத் தக்கப் பாடங்களைக் கற்பித்து இராஜாங்க வுத்தியோகங்களைக் கொடுத்து வருவார்களாயின் சகலவகுப்பாரும் இராஜாங்க உத்தியோகத்தைப்பெற்று சுகச்சீரடைவதுடன் குடிகள் யாவரும் இராஜவிசுவாசத்தில் நிலைத்து ஆறுதலடைவார்கள்.
தங்களது தேசத்தைப் போல் இத்தேசத்தையும் நோக்குவதாயின் சகலமும் மாறுதலடைந்தேனிற்கும். அதாவது வித்தியாவிருத்தி, விவசாயவிருத்தியில் நோக்கமுடையவர்கள் பி.எ, எம்.எ. என்னும் பட்ட விஷயங்களில் விருத்திபெறமாட்டார்கள். அத்தகையசோர்வினால் உள்ள பூமிகளையும், உள்ள செல்வத்தையும் இழந்து பரிட்சையிலும் தேறாது பாழடைவது சிலக் கூட்டத்தோர் இயல்பாம். பி.எ. பட்டம், எம்.ஏ. பட்டமென்னும் உருவுபோடுவதே முயற்சியுள்ளவர்கள் தங்கள் கனவிலும் விவசாய விருத்தியையும், வித்தியா விருத்தியையும் சிந்திக்கவேமாட்டார்கள். வேறு சிந்தனையற்று பட்டம் பெற வேண்டும் என்னும் சிந்தையை உடையவர்கள் விடாமுயற்சியாய் உருப் போட்டு பட்டம் பெற்றுவிடுகின்றார்கள். இத்தகைய உருப்போடுஞ் செயலில் சில கூட்டத்தோர் முயலுவார்கள். வித்தையிலும், விவசாயத்திலும் சில கூட்டத்தோர் முயலுவார்கள்.
இவ்விரு கூட்டத்தோருள் ஒரு கூட்டத்தோரே பட்டங்களைப்பெற்று இராஜாங்க உத்தியோகத்திற்கு ஆளாகிவிடுவார்கள். அவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்துக்கொண்டவுடன் ஏனைய ஒரு கூட்டத்தார் சகல விஷயங்களிலும் நசிந்துப் பாழடைவதற்கே பாதையாகின்றது.
ஆதலின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் தங்கள் ஆளுகைக்குட்பட்ட சகலகுடிகளும் சிறப்புற்று வாழும்படியான ஏதுக்களில் பெரும்பட்டம் பெறவேண்டுமென்னும் தங்கள் சட்டங்களைத் திருத்தி ஆதரிக்கும்படி வேண்டுகிறோம். வாசித்துப் பெரும்பட்டம் பெற்றவர்களுக்கே இராஜாங்க உத்தியோகங் கொடுக்கப்படுமென்னும் நிபந்தனையால் தேசத்திற்குக் கால்பாக சுகமும், முக்கால்பாக துக்கமுமுண்டாகின்றபடியால் அத்தகைய நிபந்தனைகளை அகற்றி கருணை நிறைந்த ஆளுகைக்குட்பட்ட சகல குடிகளும் சுகம்பெற வேண்டுமென்பதையே நாடியுள்ளோமாதலின் வித்தியாவிஷயத்திலும், விவசாய