பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 331

செயலால் சில நற்குணமுள்ள பிராமணரென்போர்களையுஞ் சந்தேகத்திற்குள்ளாக்கிவிட்டான்.

ஆதலின் பிளைக்கென்னும் ரோகமூல விஷக்கிருமித் தோன்றாவண்ணம் பல முயற்சியும் ஜாக்கிரதைப்புமா யிருப்பதுபோல் வெடிகுண்டு விட்டெறியும் இராஜத்துரோக விஷக்கிருமிகள் எங்கெங்கு தோன்றுகிறதென்று அரிய விவேகத்தாலும், விடாமுயற்சியாலுங் கண்டறிந்து நசிக்கவேண்டியதே இராஜாங்கத்தோர் கடனென்னப்படும்.

- 4:40: மார்ச் 15, 1911 -


197. உத்தமபுருஷனாக விளங்கிய இராஜா சர் சவலை இராமசாமி முதலியார் கே.டி., சி.ஐ.ஈ. அவர்கள் மரணம்

சீவராசிகள் முதல் ஏழைமக்கள் வரை உபகாரியாக விளங்கிய பெரியோன் இராமசாமி முதலியாரவர்களின் மரணத்தைக் கேட்டு மிக்க துக்கிக்கின்றோம்.

காரணமோவென்னில் இவ்விந்திய தேசத்திற் பல கனவான்களிருந்தும் இவரை ஒத்த பரோபகார மிகுத்த சிந்தையும், அழியா தன்மவிந்தையம் அமைந்தோர் ஒருவருமில்லையென்றே துணிந்து கூறுவோம். அதாவது, அவரால் நாட்டியுள்ள தண்ணீர் தொட்டிகளே அழியாதன்மத்திற்கு ஆதரவாகும். கானலில் தவிக்கும் பட்சிகளுக்கும், மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் விடாய்தீர்த்து களைபோக்குவதொன்று. இத்தகைய தன்மத்தை ஒருவன் அழிக்கவாவது, அடியோடு எடுக்கவாவது கூடுமோ, கூடாவாம். தன்மத்தைக் கண்ட மற்ற தன்மப் பிரியர்கள் மேலும் மேலும் இத்தகைய கன்மத் தண்ணீர் தொட்டிகளைக் கட்டவும். சீவர்களின் தாகவிடாய்த் தீர்க்கவும் வழிகாட்டியாக நின்றவர் இராமசாமி முதலியாரவர்களே யாகும். பெருத்த சத்திரங்களைக் கட்டுவித்து சகல சாதியோரை சுகமாகத் தங்க வைத்துள்ளவரும், அனந்தப் பிரசவ வைத்தியசாலைகளைக் கட்டி வைத்தவரும் அவரேயாம். இவரது ஈகையின் குணத்தை அறிந்தே நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் சி.ஐ.ஈ. என்னுங் கெளரதாபட்டம் அளித்தார்கள். முனிசிபெல்கமிஷனராகவும் நியமனம் பெற்றார். சென்னை ஐகோர்ட்டில் ஷெரிப்பாகவும் விளங்கினார். நமது விக்டோரியா பெருமாட்டியின் ஜூபிலி கொண்டாட்டத்தில் கே.டி. என்னும் பட்டமும் ஏழைகளை ஆதரிக்குங் குணத்தால் ராஜா, சர். பட்டமும் பெற்றார். நமது எட்வர்ட் சக்கிரவர்த்தியாருக்கு முடிசூட்டுங் காலத்தில் சென்னை ராஜதானியில் இவரோர் பெரியோனெனத் தெரிந்தெடுத்து அழைக்கப்பெற்றார். புதுச்சேரியில் இவரோர் பெருத்தக் குடும்பத்திற் பிறந்தவர்.

இத்தியாதி உபகாரங்களும் சிரேஷ்ட்டப்பட்டங்களும் பெற்றுள்ளதுடன் பஞ்சம ரென்றும், பறைய ரென்றும், சாம்பானென்றும், வலங்கையரென்றும் அழைக்கப்பெற்ற பூர்வத் தமிழ் குடிகளாம் ஏழை மக்களுக்கு இத் தென்னிந்தியாவில் பிரைமரி ஸ்கூல்களும், பூமிகளும் கொடுக்கத்தக்க அழியா முயற்சி செய்வித்தவரும் அவரேயாம்.

அஃதெவ்வகையாலென்னில், 1892 வருடம் சென்னை மகாஜனசபைக்கு நீலகிரி பிரதிநிதியாக நாம்வந்து இவ்வேழைப்பெரியோர்களுக்கு பூமிகளும், சிறுவர்களுக்குக் கலாசாலையும் வைத்து ஆதரிக்கும்படியான ரெக்கமெண்டு கவர்ன்மெண்டாருக்கனுப்பி ஆதரிக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டபோது இதேமகான் இராமசாமி முதலியாரவர்களெழுந்து சங்கற மென்பவரைத் தனக்குதவியாகக் கூட்டி மகாஜனசபையோரால் கவர்ன்மெண்டாருக்கு ரெக்கமெண்டு செய்யத்தக்க ஏதுவைத்தேடி அக்காரியத்தை முடிவுசெய்து சென்னை ராஜதானியெங்கும் பிரைமரி தன்மகலாசாலைகள் ஏற்படுத்தி அனந்தமாயிரம் ஏழை பிள்ளைகள் கல்விகற்றுவருவதும், ஏழைபெரியோர் அனந்தம் பூமிகளைப்பெற்று சுகசீவனஞ்செய்துவருவதும் இவ்வுத்தமதான பரோபகார புருஷனாம் இராமசாமி முதலியாரவர்களின் பேருபகாரமேயாதலின் இத்தகைய புண்ணியபுருஷன் மறைந்த செய்தியைக்கேட்ட அனந்தங்கோடி