அரசியல் / 345
தொகையின் பெருக்கத்தையும் அத்தொகைகளை பக்கீரிகள்முதல் அந்தஸ்துள்ள உத்தியோகஸ்தர்களும் அரசர்களும் அன்புடன் அளித்துவரும் ஈகையின் பெருக்கத்தையும், டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்தி உயர்த்தப் போகின்றோம் என்னுங் கூட்டத்தார் உய்த்து நோக்குவார்களாயின் தங்களுக்குள்ள வித்தையின் குறைவையும், தங்களுக்குள்ள தனக்குறைவையும், தங்களுக்குத் தாங்களே சீர்திருத்திக்கொள்ளுதற்கு அறியாசெயலின் குறைவையும் நன்குணர்ந்து டிப்பிரஸ்கிளாஸ் யாரென்பதைத் தங்களுக்குத் தாங்களே தெரிந்துக் கொள்ளுவார்கள்.
அங்ஙனம் சீர்திருத்தக்காரர்களை நோக்காமலும், சீர்திருத்தக்காரர்கள் செயல்களை உணராமலும் அவர்கள் வித்தையையும் புத்தியையும் ஆராயாமலும், அவர்களது செல்வத்தையும் சுகத்தையும் கண்டுணராமலும் உள்ளவர்களாதலின் தங்களுக்குத்தாங்களே சீர்திருத்தக்காரர்களென்றெண்ணி ஏனையோரை டிப்பிரஸ்கிளாசென்று கூறி அவர்களை சீர்திருத்தப்போகின்றோமென்று வெளிதோன்றிவிட்டார்கள்.
சாதிபேதமென்பது கூடாது அஃது ஒற்றுமெய்க் கேட்டை உண்டு செய்யுமென்று உணர்ந்து ஒற்றுமெயிலமைந்திருப்பவர்களை டிப்பிரஸ்கிளாசென்றும், தூதனமாய சாதிபேதத்தை உண்டு செய்துக்கொண்டு ஒற்றுமெய்க் கேட்டால் ஒருவருக்கொருவர் சீறிநிற்போர் அய்யர்கிளாசென்றும் கூறுவதை உலக மேதாவிகள் நோக்குவார்களாயின் யாவர் அய்யர்கிளாசென்றும், யாவர் டிப்பிரஸ் கிளாசென்றும் திட்டமாக விளக்கிவிடுவார்கள்,
தேகத்தை வருத்தி பூமியைப் பண்படுத்தி தானியவிருத்தி செய்பவரையும் கூலியெடுத்தேனும், வண்டி இழுத்தேனும் தேகத்தை வருத்தி பொருள் சம்பாதித்து தன் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றி வருவோரை டிப்பிரஸ் கிளாசென்றும், தேகத்தை சோம்பலில் வளர்த்து பெரும் பொய்யைச் சொல்லிக்கொண்டு பொருள் சம்பாதித்து தங்கள் பெண் பிள்ளைகளைக் காப்பாற்றுவோரை அய்யர் கிளாசென்றும் கூறுவோர்களை அறிவில் மிகுத்தோர் நோக்குவார்களாயின் அய்யர்கிளாஸ் யார், டிப்பிரஸ் கிளாஸ் யாரென்பதை அப்போதே விளக்கிவிடுவார்கள்.
யாதொரு களங்கமுமின்றி பல தேசங்களுக்குச் சென்றும், பல பாஷைக்காரர்களுடன் ஒத்தும் ஆனந்தமாகச் சுற்றி வருவோரை டிப்பிரஸ் கிளாசென்றும் ஒரு தேசம் விட்டு மறுதேசம் போனால் சாதிகெட்டுப்போம், சமயம் கெட்டுப்போம் என்னும் சோம்பலுள்ளோரை அய்யர் கிளாசென்றும் கூறுவோர்களை அன்பும் அரிய வித்தையும் அமைந்தோர் நோக்குவார்களாயின் டிப்பிரஸ் யார், அய்யர் யாரென்பதை அவர்களே விளக்கி விடுவார்கள்.
பாணவேடிக்கையும், மத்தாப்பு வேடிக்கையும், தீவர்த்தி வேடிக்கையும், தாசி வேடிக்கையும் வைத்து வீணே பணம் விரயஞ்செய்பவர்கள் தங்கள் தேசசிறுவர்களுக்குக் கல்விசாலையும், கைத்தொழிற்சாலையும் வைத்து விருத்தி செய்ய முயல்கின்றார்களா, இல்லையே. இத்தகைய சீர்திருத்தங்களைத் தங்களுக்குள் செய்ய சக்தியற்றவர்கள், டிப்பிரஸ் கிளாசென்று யாரைக்கூறி யாரை சீர்திருத்தப்போகின்றார்களோ விளங்கவில்லை. மற்றுமுள்ளக் குறைகள் யாவையும் ஒவ்வொன்றாக விளக்குவோமாயின் வீணே மனத்தாங்கலுண்டமெனக் கருதி நிறுத்திவிட்டோமாதலின் டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தப் போகின்றவர்கள் தங்களை முதலாவது சீர்திருத்திக்கொள்ளுவது அழகாம். அங்ஙனமிராது வெறுமனே வோர்க் கூட்டத்தோரை டிப்பிரஸ்கிளாஸ், டிப்ரெஸ்கிளாசெனக் கூறி இன்னும் பாழ்படுத்துவது அழகின்மெயேயாம்.
- 4:49; மே 17, 1917 -
210. கனந்தங்கிய கவர்ன்மென்றார் கருணைவைத்தல்வேண்டும்
யாவர்மீதென்னில், சாதிபேதபொய்க்கட்டுப்பாட்டிற்கு உட்படாது அல்லல்பட்டழியும் அறுபதுலட்ச எழிய குடிகளின் மீதேயாம். யாதுக்கோவென்னில், தற்காலம் இவ்விந்தியதேசத்தில் பெருங்கூட்டங்கள் கூடி