உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நடந்துள்ள திருநெல்வேலி கலகத்தை யாதாரமாகக் கொள்ளினும் அதிற் பலசாதியோர்களையும் சமரசமாக தெண்டித்திருக்க இப்பிராமணரென்று சொல்லிக்கொள்ளுங் கூட்டத்தோருக்கு மட்டிலும் உண்டாய துவேஷமென்னை. அந்தக் கலைக்ட்டரின் குணாதிசயங்களை அறிந்த விவேகமிகுத்த மேன்மக்கள் யாவரும் அவரை மிக்க நல்லவரென்றும், நீதிமானென்றும் சகலசாதி மனுக்களையும் சமமாக பாவிப்பவரென்றும் கொண்டாடுகின்றார்கள். ஆதலின் அவரைக் கொலைபுரிந்த காரணம் தங்கள் கூட்டத்தோர் சுகத்தைக் கருதிய ஏதுவாயிருக்குமேயன்றி வேறில்லை.

இதனை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் சீர்தூக்கி ஆலோசித்து தங்களை போல் அன்பும் நீதிநெறியும் மற்றவர்களுக்கும் இருக்குமென்றெண்ணாது இராஜதுரோகத்திற்கு உரியக் கூட்டத்தோர் இன்னாரின்னாரெனக் கண்டறிந்து அவர்களை அடக்கி ஆளவேண்டிய முயற்சியிலேயே இருத்தல் வேண்டும்.

அத்தகைய முயற்சியைத் தேடாது நெருப்பில் விழுந்த தேளை அப்புறப்படுத்துவது போலும் இருப்புவலையிற் சிக்குண்ட, புலியை நீக்கிவிடுவது போலும், விஷப்பாம்புகளுக்குப் பால்வார்த்து வளர்ப்பதுபோலும், வஞ்சக மிகுந்தவர்களால் இராஜதுரோகிகளுக்கு உதவிபுரிவதாயின் அவர்களால் இராஜாங்கத்தோருக்கும் மற்றயக் குடிகளுக்கும் தீங்கு விளையுமேயன்றி சுகம் விளையமாட்டாது. இவற்றை நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோர் கவனித்து துரோகிகளைக் கண்டு தக்கபடி அடக்கியாள வேண்டுகிறோம்.

- 5:3; சூன் 28, 1911 -


219. இராஜ துரோகிகளை அடக்கும் வழி

நமது கருணை தங்கிய ராஜாங்கத்தோர் சாதிபேதமற்றவர்களும் சமயபேதமற்றவர்களுமாதலால் சகலசாதியோர்களுந் தங்களைப்போலவே ஈவும் இதக்கமும் சுபகுணமும் உள்ளவர்களாயிருப்பார்களென்றெண்ணி சகலருக்கும் சமரசமான உத்தியோகங்களைக் கொடுத்துக்கொண்டு வருகின்றார்கள்.

அத்தகைய உத்தியோகங்களைப் பெற்றுவரும் வஞ்சகமும் குடிகெடுப்பு மிகுத்த ராஜதுரோகிகள் கரும்பை நடுவில் வெட்டிப் புசிப்பதுடன் வேரோடும் பிடுங்கித் தின்பது நலமென்று யோசிக்கும் பேராசையைப்போல் பிரிட்டிஷ் ஆட்சியில் நாம் ஒருவன் மட்டிலும் சுகசீவனம் பெற்றிருப்பதுடன் நமதுசாதியோரெல்லவரும் ராஜாங்கத்தையே கைப்பற்றிக்கொண்டால் மேலான சுகமடையலாமென்னும் ஆசையால் பிரிட்டிஷ் ஆட்சியோர் செய்துவரும் சகல நன்றிகளையும் மறந்து அவர்களுக்கு எதிரிடையானத் தீங்குகளையே செய்து வருகின்றார்கள்.

“பல்லிகளையும் பட்சிகளையும் பாதுகாக்கவேண்டியது. பாம்பையுந் தேளையும் தலைநசுங்கக் கொல்லவேண்டிய” தென்னும் பழமொழிக்கிணங்க இராஜ விசுவாசமுடையவர்களுக்குத் தங்களுக்குரிய ராஜவுத்தியோகங்களைக் கொடுத்தும் இராஜதுரோகமுடைய வன்னெஞ்சமுடையவர்களை ஏறவிடாமல் நசித்து வரவேண்டியதே அழகாகும்.

அவர்களுக்கு ஆதரவாக பிரான்சி ராட்சியத்திற்கு அருகேயுள்ள பிரிட்டிஷக்குரிய சில பூமிகளை பிரான்சியருக்குக் களித்துவிட்டு அவர்களுக்குரிய பாண்டிச்சேரி என்னும் சிறிய நாட்டையும் அதனைச் சார்ந்த பூமிகளையும் சென்னை ராஜதானியில் சேர்த்துக்கொள்ளவேண்டியது. மற்றும் அதற்கு உபபலமாக முப்பது வருடங்களுக்கு முன்பு சென்னை கமாண்டரின்சீப் வீட்டின் முகப்பிலும், ஜெனரல்கள் வீட்டின் முகப்பிலும் பிரிட்டிஷ்கொடிகள் பரப்பியிருந்ததுடன் யூரோப்பியன் ரிஜிமெண்டுகளும் பட்டாளங்களும் நிறைந்திருந்ததுபோல் இராஜதானி பீடத்தில் அமர்த்திவிட்டு திரிச்சி, மதுரை, கோயமுத்தூர், நீலகிரி, கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அரசாட்சியோர் சூழ்ந்தயிடங்களில் யூரோப்பியன் ரிஜிமெண்டின் ஒவ்வோர் கம்பனிகளை