பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372 / அயோத்திதாசர் சிந்தனைகள்


225. முனிஷீப்பும் மணியக்காரர்களும்

தற்காலம் இத்தேசத்தில் பலசாதிப் பிரிவினைகளும், சமயப் பிரிவினைகளும் உண்டு. இத்தேசத்தை ஆளும் பிரிட்டிஷ் அரசாட்சியாரோ சாதிபேதங்களுமற்று சமய பேதங்களுமற்று தன்னவ ரன்னியரென்னும் பட்சபாதமற்று நீதியின் செங்கோலை கையிலேந்தியவர்கள். இத்தகையோராளுகைக்கு உட்பட்ட உத்தியோகஸ்தர்களும் இதே மேதாவியர்களாயிருப்பார்களாயின் சகல ஏழைக்குடிகளும் சுகம்பெற்று வாழ்வதுடன் பூமிகளும் பண்பட்டு பலதானியங்களும், விருத்தி பெற்று வரும். அங்ஙனமின்றி பலசாதிப் பெயர்களை வைத்துக்கொண்டு முறுமுறுப்பவர்களும், பல சமயச்செயல்களை வைத்துக்கொண்டு முறுமுறுப்பவர்களுமாகியவர்களுக்கு மேற்கூறிய உத்தியோகங்களைக் கொடுப்பதாயின் தங்கள் சாதிக்கு வேறாய சாதியோர்களைக் கண்டவுடன் முறுமுறுப்பும் தங்கள் சமயத்தோருக்கு வேறாய சமயத்தோர்களைக் கண்டவுடன் முறுமுறுப்புங்கொண்டு தங்களதிகாரத்தைச் செலுத்தி கேடுபாடுகளை உண்டு செய்வதுடன் சாதி பேதமில்லாமலும் சமய பேதமில்லாமலும் வாழும் ஏழைக்குடிகளை தங்கள் தங்கள் சாதியதிகாரத்துடன் உத்தியோக அதிகாரத்தையும் சேர்த்துக்கொண்டு ஏழைகளைத் தலையெடுக்கவிடாமல் இன்னுந் தாழ்த்தத்தக்க ஏதுக்களில் கொண்டு வந்துவிடுகின்றார்கள். இராஜாங்க உத்தியோகத்தையும் பெற்றுக்கொண்டு தங்களுக்குள்ளப்பூர்வ விரோதத்தை சரிவரப் பார்த்துக்கொள்ளுகின்றார்கள்.

பலசாதி பிரிவுகளிருப்பினும் சாதிபேதமுள்ளவர்கள் யாவரும் ஓர் வகுப்பிலிருந்துகொண்டு சாதிபேதமில்லா ஏழைக்குடிகளையே கெடுப்பது அவர்களியல்பாம். இத்தகையப் பூர்வ விரோதச் செயல்கள் யாவும் கருணைதங்கிய ராஜாங்கத்தோருக்குத் தெரியாததாதலின் இந்திய பௌத்தர்கள் யாவரும் ஒருங்குகூடி பூர்வசரித்திரத்தை விளக்குவதே தாவளை. அங்ஙனம் விளக்கி நமது சுதந்தரங்களைக் கேட்காவிடின் ஒருக்காலும் முன்னேறமாட்டோம்.

நாம் சகலரும் முன்னேறி பூர்வ சுகச் சீர்பெறவேண்டுமாயின் பூர்வ பௌத்த தன்மப்பற்றையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையையும் பெற்று குருவிசுவாசத்திலும் இராஜ விசுவாசத்திலும் நிலைத்தல் வேண்டும். இதுவே சத்தியவழியாம்.

இதனுடன் பிரிட்டிஷ் ஆட்சியார் கிராம மக்களுக்குத் தற்காலமளித்துவரும் முனிஷிப்பு மணியம் முதலிய உத்தியோகங்களை சற்றுவாசித்தவர்களுக்கும், தக்க அந்தஸ்துள்ளக் குடும்பத்தவர்களுக்கும் அளித்துவருவார்களாயின் ஏழைக்குடிகள் ஈடேற்றத்திற்கோர் வழியுமாகும்.

- 5:12; ஆகஸ்டு 30, 1911 -


226. இந்திய விவசாயம் விவசாயம் விவசாயம்

பூமியைப் பண்படுத்தும் வேளாளர்களாகியப் புண்ணிய புருஷர்களே, சற்று நோக்குவீர்களாக. வேளாளர்க்குரிய பூவாளரென்னுந் தொழிற்பெயர் சிறப்புற்றிருக்கும் வரையில் இந்திரர் தேசம் மாதம் மும்மாரி பெய்யவும், பூமி திருந்தவும், பயிறுகளோங்கவும், குடிகள் சிறக்கவும், கோனுயரவுமாகிய சீர்பெற்றிருந்தது.

அதே வேளாளனென்னுந் தொழிற்பெயர் கொண்டைகட்டி வேளாளன், காரைக்காட்டு வேளாளன், துளுவ வேளாளனென்னும் சாதிப்பெயர்களாக மாற்றி ஒவ்வொருவருக்குள்ள கொடுக்கல் வாங்கல் சம்மந்தமும் புசிப்பின் சம்மந்தமுங் கெட்டு நான் சின்னசாதி அவன் பெரிய சாதியென்னும் பொறாமெய்ச்செயல்களே மேலிட்டு அறஹத்துக்களுக்கு அன்னமளிக்கும் பெளத்ததன்ம ஈகையும் விட்டு சாதிக்காச்சல், சமயக்காச்சல், பூர்வ யதார்த்த வேளாளனைக் கண்டவுடன் தாழ்ந்த சாதியோனென்றெண்ணும் பொறாமெக்காச்சல் அதிகரித்துக்கொண்டே வந்துவிட்டபடியால்