பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 385

கார்க்கிறதுமாயிருக்கும்போது மநுக்களாகிய நாம் ஏழைமக்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு உத்தியோகங் கொடுப்பதினாலும் இலஞ்சம் வாங்கிக்கொண்டு முகபரிட்சை செய்விப்பதனாலும் யாது கெடுதி உண்டாமென்னுந் தைரியத்தினால் மக்களுக்கு மக்கள் உபகாரச்செயலென்பதற்று கூட்டுக்குலஞ்சம், பாட்டுக்கு லஞ்சம், ஏட்டுக்கு லஞ்சமென எடுக்குஞ் செயல்களுக்கெல்லாம் கொடுக்கல் இலஞ்சமென்றே ஏற்படுத்திக்கொண்டு ஏழைகளை வாதித்து வருகின்றார்கள். இத்தகைய வாதைகளுக்கெல்லாங் காரணம் மதக்கடைகளுக்குள் வைத்திருக்கும் சிலசாமிகளும் பொய்க்குருக்களுமே காரணமென்னப்படும். சாமிகள் மனுக்களுக்கு உபகாரஞ்செய்வதுபோக மநுக்களே சாமிகளுக்கு உபகாரமென்னும் இலஞ்சமீவதாயின் ஏழைகளெல்லோருங் கனவான்களுக்கு லஞ்சங்கொடுப்பதால் யாது குறையுண்டாமென்னும் உறுதியால் கொடு கொடு என்பதும், வாங்கு வாங்கென்பதும் சாமி பக்தியாளரிடமே உண்டென்பது உறுதியாயதால் தேசத்தில் லஞ்சமுண்டாயதற்குக் காரணம் சாமியும், சாமிபக்திகளுமேயாம்.

- 5:24: நவம்ப ர் 22, 1911 -


237. ஹானரேபில் ஜஸ்டிஸ் சங்கர நாயரும் இந்து யூனிவர்சிட்டியும்

இந்து யூனிவர்சிட்டியின் ஏற்பாட்டினால் சிலப் பிரிவினைகளை உண்டுசெய்யும் என்று ஜஸ்டிஸ் சங்கரநாயரவர்கள் கூறிய விஷயத்தை சிலர் மறுத்து அவற்றைப் பிசகென்று கூறுவது தப்பரையேயாம். காரணம் கருணைதங்கிய பிரிட்டிஷ் இராஜாங்கத்தோர் நடத்திவரும் யூனிவர்சிட்டி ஒன்றிருக்கும்போது அவற்றிற்கு மாறாக இந்து யூனிவர்சிட்டி என ஒன்றேற்பட்டதே பிரிவினைக்கு ஆதாரமென்னப்படும். அதற்குப் பகரமாகவே மகமதியர் யூனிவர்சிட்டி தோன்றியதே போதுஞ்சான்றாம்.

இனி கிறிஸ்ட்டியன் யூனிவர்சிட்டி, புட்டிஸ்ட் யூனிவர்சிட்டி தோன்றவேண்டியதுதான் குறை. இங்ஙனமிருக்க இந்து யூனிவர்சிட்டியால் பிரிவினை உண்டாகாதென்று கூறுவது சமயயுக்த்தமாகப் பூசிமொழுவுதலேயன்றி யதார்த்த மொழிகளாகமாட்டா, இந்துவென்னும் பெயர் தோன்றியபோதே அதனுள் சாதி வித்தியாசமும், மதவித்தியாசமும் இருந்தே தீரவேண்டுமென்பது பிரத்தியட்ச அனுபவமாயிருக்க இந்து யூனிவர்சிட்டியில் சாதிபேதங் கிடையாதென்பது விந்தைமொழியாம். ஈதன்றி பஞ்சாபி தேசத்திலுள்ளவர்களில் சிலர் வருணாசிரம தன்மம் இருத்தல் வேண்டுமென்று கூறியிருப்பதும் கனந்தங்கிய ஆனிபீசென்டம்மாள் சாதிபேதம் இருந்தே தீரவேண்டுமென்று கூறியுள்ளதும் ஜஸ்டிஸ் சங்கரநாயரவர்கள் அறியாததல்லவே. சுதேசமித்திரன் பத்திராதிபர் சீனதேசத்தோர் சீர்திருத்தம் யாவும் சரியேயாயினும் அவர்களது அடிமைகளையும், பேடிகளையும் வீட்டு வேலைக்காரர்களாக வைத்துக் கொள்ளுகின்றார்கள். அவ்வகை அடிமைகளை வீட்டுவேலைக்காரர்களாக வைத்துக்கொள்ளும் வரையில் அவர்களது சீர்திருத்தம் பயன்படாதென்று கூறிய மொழி மனிதனை மனிதனாகப் பாவிக்காத சாதி வித்தியாச மொழியென்பது யாவருக்குத் தெரியாததோ. சின்னசாதி பெரியசாதி என்னும் மூட்டையை வலுவாகக் கட்டிக்கொண்டுள்ள பத்திராதிபரும் ஜஸ்டிஸ் சங்கரநாயரவர்கள் மொழிக்கு மறுப்புக் கூறப்போமோ இல்லை. சகல சாதிகளுக்கும் நாங்களே பெரியசாதிகளென்று கூறித்திரியும் சாதிகர்வமும் சகல மதங்களுக்கும் எங்கள் மதமே பெரியமதமெனக் கூறித்திரியும் மதகர்வமுமே எதேச்சையில் இராஜாங்கத்தையே எதிர்க்கும் இராஜத்துரோக கர்வத்தை உண்டு செய்துவருவது அநுபவக்காட்சியாயிருக்க அதை உணராது ஜஸ்டிஸ் சங்கரநாயரை வெறுப்பது அவலமேயாம். “யதார்த்தவாதி வெகுஜனவிரோதி” எனும் பழமொழிக்கிணங்க சாதிவித்தியாசங் கூடாதென்னும் சீர்திருத்தக்காரர் சொற்பமும் சாதிவித்தியாசம் இருந்தே தீர வேண்டுமென்போர் கூட்டம் பெருகியும் இருக்கின்ற படியால் அவர் கூறியுள்ள யதார்த்த மொழி