பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 389

ஆறுகோடி மக்களுள் ஆறுபேரேனும் மிகுந்திருப்பார்களோ இரார்களோவென்பதை சாதித்தலைவரது தற்காலத்தியக் கருணை அற்றச் செயலாலும் ஆறுகோடி மக்கள் அல்லலும் அவதியுமுற்று மனங்குன்றி நாணடைந்து கண்ணீர் விட்டழுங் கவலையாலுமேயாம்.

இத்தகைய கவலைகொண்டழுவோர் சதா ஏழைகளன்று. பூர்வம் இத்தேசத்து பௌத்தன்ம மேன்மக்களாயிருந்து கருணையற்ற சத்துருக்களால் தாழ்ந்து கண்கலங்கினிற்கின்றார்கள். அவர்களது கண் கலக்கமும் பழிபாவமும் வீண்போகாது, வீண்போகாது.

ஏழைகள் அழுங் கண்ணீர் கூரியவாளுக்கு ஒக்குமென்பதே.

- 5:27; டிசம்பர் 13, 1911 -


240. சென்னை ராஜதானி விவசாய விருத்திக் கெடுதி

பர்ம்மா , சைனா, ஜப்பான், அமேரிக்கா முதலியதேசங்களின் விவசாயவிருத்தி இராஜாங்கத்தோர் உதவியின்றி அந்தந்த தேசத்து வேளாளர்கள் தங்கள் தங்கள் முயற்சிகளால் பூமிகளை உழுது பண்படுத்தி தானியங்களை விளைவித்து தங்கள் தங்கள் தேசங்களுக்கு சுகமளிப்பதுடன் ஏனய தேசங்களுக்கும். தானியங்களை அநுப்பி அவ்விடமுள்ள மக்களுக்கும் சுகமளித்து வருவதுடன் வியாபார பெருக்கமும் அதிகரித்து வருகின்றது.

அத்தகைய விவசாய விருத்தியும் வியாபார விருத்தியும் பெருகி சுகச்சீர் பெருவதற்குக் காரணம் யாதெனில், அந்தந்த தேசங்களிலுள்ள வேளாளர்களாம் விவசாயத் தொழிலாளிகளே விடா முயற்சியினின்று முதலாளிகளாயுள்ளவர்கள் ஏழைகளுக்கு உதவி புரியவும், ஏழைகளாயுள்ளவர்கள் தங்களது விடாமுயற்சிகளால் பூமிகளை சீர்திருத்துங் கவலையும், நீர் பாய்ச்சுங் கவலையும், பண்படுத்துங்கவலையும், பயிறினை ஓங்கச் செய்யுங் கவலையிலுமிருந்து தாங்களும் சுகச்சீர் பெருவதுடன் முதலீவோர்களுக்கும் சுகமளித்து வருவது வழக்கமாகும்.

முதலீயும் வேளாளத் தொழிலாளர்களும் தானியமுதலை பெற்றுழைக்கும் வேளாளத் தொழிலாளர்களும் ஒற்றுழைத்து ஒருவருக்கொருவர் பேதமின்றிப் பல தானியங்களையும் பெருகச்செய்து வருவதினால் முதலீவோரும் முதலினைப் பெற்றுழைப்போரும் சுகசீவிகளாக வாழ்வதுடன் சகல தேசங்களுக்கும் படியளந்து போஷிக்கச் செய்துவருகின்றார்கள்.

தென்னிந்திய விவசாயிகளோவென்னில் தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப் பெயர்களாக மாற்றி அவன் சின்னசாதி, இவன் பெரியசாதி என்னுங் கொறூரச் செயல்களையே விருத்தி செய்துக்கொண்டதுமன்றி தங்கள் சுயப்பிரயோசனங்களை நாடி தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப் பெயர்களாக மாற்றியுள்ள சாதித் தலைவர்கள் மனுதன்ம சாஸ்திரமென்னுங் கட்டுக்கதையை ஏற்படுத்தி அதிற்றங்களுக்கான சீவனோபாயங்களை ஏற்படுத்திக் கொண்டதுமன்றி, “பயிரிடுந்தொழில் இழிந்ததொழிலென்றும்” வரைந்து வைத்திருக்கின்றார்கள். கீழ்ச்சாதி மேற்சாதியென்று அமைத்து வைத்துள்ள சாஸ்திரத்தை மெய்யென்று நம்பியுள்ள யாவரும் அதில் வரைந்துள்ளப் பயிரிடுந் தொழிலும் இழிந்த தொழிலென எண்ணி விவசாயத் தொழிலைவிட்டுப் பாழடைந்து போனார்கள்.

இத்தகைய பொய்வேஷமாம் சாதிக்கட்டுப்பாட்டை நம்பாமலும் அவர்களில் அடங்காமலுமிருந்த பௌத்த கூட்ட வேளாளத் தொழிலாளர் மட்டிலும் பூமியைப் பண்படுத்தி தானியவிருத்தி செய்துவந்தார்கள். பொய்சாதி வேஷக்காரர்களுக்கும், பொய்ச்சாதித் தலைவர்களுக்கும் அடங்காது பௌத்ததன்மத்தை நிலைநிறுத்தி வந்த விவேகமிகுத்த மேன்மக்கள் யாவரையும் தாழ்ந்த சாதிகளென நசிப்பதற்கு ஆரம்பித்துக் கொண்டதன் பேரில் வேளாளத்தொழிலாளர்களுக்கு முதல் ஈய்ந்து உதவும் வேளாளர்கள் யாவரும், சாதித் தலைவர்களுடன் கலந்துக்கொண்டு முதலீவோரென்னும் பெயரற்று தானியமுதலுள்ளவர்களும் தானியமுதலில்லாதவர்களும் தங்களை முதலியார்