பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406 / அயோத்திதாசர் சிந்தனைகள்

விருத்தியையும், வித்தியாவிருத்தியையும் அறிந்த சாலோமோன் முதலியப் புறதேச அரசர்கள் பலரும் இத்தேசத்துள் வந்து அரியவித்தைகளைக் கற்றுச் சென்றதாக சரித்திரங்கள் கூறுகின்றது. அவ்வகை சிறப்புற்றிருந்த தேசமும் தேசமக்களும் நாளுக்குநாள் சீர்கேடடைந்துவருங் காரணமோவென்னில் குடிகளுக்குள்ள வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் இவைகளற்று குடிகெடுப்பு, வஞ்சினம் பொறாமெய், லோபம், துன்மார்க்கம், சோம்பல் இவைகள் பெருகிக்கொண்டே வருகின்றபடியினாலேயாம். இத்தகைய சீர்கேடுகளினால் புறதேசங்களில் இருந்தும் இத்தேசம் வந்து அரியவித்தைகளைக் கற்றுச்சென்ற சிறப்புகள் நீங்கி இத்தேசத்தோர் புறதேசஞ்சென்றும் அவ்விடத்திய வித்தைகளைத் கற்பதுங் கடினமாகிவிட்டது. பூர்வ புத்ததன்ம வித்தியாவிருத்தியுங் கெட்டு, புத்தியின் விருத்தியுங்கெட்டு, ஈகையின் விருத்தியுங்கெட்டு, சன்மார்க்க விருத்தியுங்கெட்டு நூதனமாய இந்துதன்ம பொறாமெ மிகுத்த சாதிவித்தியாசங்கள் பெருகியும் மதவித்தியாசங்கள் பெருகியும், அந்த சாதியோன் ஆசாரம் இந்தவகையென்றும், இந்த சாதியோன் ஆசாரம் அந்தவகையென்றும் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனக் கட்டுக்கதைகளை வரைந்து வைத்துக்கொண்டு உயர்ந்த சாதியோரென வகுத்துக்கொண்டவர்களெல்லாம் தங்களுடைய சம்பாதித்ய விஷயங்களில் எத்தொழிலைச் செய்யினும் சாதிகிடையாது தாழ்ந்த சாதியென அவர்களால் வகுத்துள்ளவர்கள் எத்தொழிலைச் செய்யப்புகினும் அங்கங்கு சாதிதடைகளை உண்டுசெய்து இத்தேசப்பூர்வக் குடிகளை நாசஞ்செய்து வித்தைகளையும் விவசாயங்களையும் பாழ்படுத்தும், சாதிவித்தை, சமாத்து வித்தைகளைப் பெருக்கிக்கொண்டேவருகின்றார்கள். இத்தகைய அசத்திய அசப்பிய துன்மார்க்கப் பெருக்கங்களால் நாளுக்கு நாள் தேசம் சிறப்பழிவதுடன் தேசமக்களும் ஒற்றுமெக்கெட்டு நாளுக்குநாள் சீர்குலைந்துபோகின்றார்கள். மற்றுஞ் சிலமதக்கடைகளைப் பரப்பி கட்டுக்கதைசாமிகளை நிறப்பி, எங்கள் சாமியை வேண்டிக்கொண்டால் சகல நோய்களையுந் தீர்த்துவிடுவார், சகல பாபங்களையுந் தீர்த்துவிடுவார், கண்ணைப் போன்ற பொன்களால் கண்ணும், காலைப்போன்ற பொன்களாற் காலும் செய்து எங்கள் சாமிக்குக் கொண்டுவந்து செலுத்துவீர்களானால் அந்தந்த பாக ரோகங்கள் நீங்குவதுடன் எங்கள் சாமியை எதைக்கோரி வேண்டினாலும் கொடுப்பார். ஆனால் பிரார்த்தனைக்குச் செய்துவருஞ் சின்னங்களை தகரத்தாலும், இய்யத்தாலும் செய்ய வேண்டாம். வெள்ளியினாலும் பொன்னினாலும் செய்துவரவேண்டுமென்னும் சுயகாரிய மதக்கடைகளும், சோம்பேறி சமயவித்தைகளையும் விருத்திசெய்து தேசச்சிறப்பையும் வித்தைகளையும், குடிகளின் வித்தியாமுயற்சிகளையும் பாழ்படுத்தி விட்டார்கள்.

மற்றுஞ் சில மதவித்தைகளோ பொய்ச்சடைகளை சிரசிற்கட்டிக் கொண்டும், பேரிலந்தங்கொட்டை மாலைகளைப் பெருக்க அணைந்து கொண்டும், சாம்பலை நிதம்பப் பூசிக்கொண்டும், வெள்ளைபொட்டின்பேரில் சிவப்புப் பொட்டும், சிவப்புப்பொட்டின்பேரில் கருப்புப்பொட்டும் இட்டுக்கொண்டும் செப்புச்சிலைகளைக் கையிற்றீட்டிப் பிடித்துக்கொண்டும் அரகரா, அரகரா என்னும் பொருளற்ற மொழியைப் புகன்றுக்கொண்டும். சோம்பேறிதொழிலால் பொருளை சம்பாதித்துப் பெண் பிள்ளைகளைக் காப்பாற்றிக்கொண்டும் வருகின்றார்கள். அதனாலும் இத்தேசத்து அரியவித்தைகளும் விவசாய விருத்திகளும் அழிந்து போயிற்று.

மற்றுஞ்சிலர் துளசிமணிகளைப் பூண்டுக் கொண்டும், பஞ்சவருண நூல்மாலைகளை அணைந்துகொண்டும், துவாதச நாமமென்னும் வெண் சாந்து, சிவப்புச்சாந்து, மஞ்சள் சாந்துகளை அணைத்துக் கொண்டும் கோவிந்தம், கோவிந்தமென்னும் அறியாமொழிகளை அரற்றிக்கொண்டும் பொருள் சம்பாதித்துப் பெண்டுபிள்ளைகளைக் காட்டாற்றும் சோம்பேறும் பெரிய வித்தைகளைக் கற்றுக்கொண்டார்கள். அத்தகையக் கூட்டப்