உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 417

பெயர். அதாவது நாலுநாள் மூசடைந்தபலகாரம் ஐந்துநாள் மூசடைந்த பலகாரங்களை வைத்துக்கொண்டு ஏழைகள் தொட்டுப்பார்த்து நல்ல பலகாரங்களை எடுத்துக்கொண்டு மூசடைந்த பலகாரங்களை நீக்கிவிடுவார்கள் என்னும் கெட்ட எண்ணத்தால் தொடப்படாது என வழங்கிவருவதுடன் அவன் கொடுக்கும் துட்டிற்கு மூச்சுருண்டையை எடுத்துக்கொடுத்து வாங்கினவள், இஃது பழையபலகாரம் மூச்சடிக்கின்றதே வேறு பலகாரங்கொடுவென்னில் நீ தீண்டி விட்ட பலகாரத்தை நாங்கள் மறுபடியும் வாங்கலாமோ வென்னும் மூசுருண்டை மாமோச வியாபாரம் மெத்தக்கொடிது கொடிது. இத்தகையக் கருணையற்றப் படுபாவிகளும் வன்நெஞ்சர்களும் வாசஞ்செய்யுந் தேசத்தில் வியாபாரம் எவ்வகையால் விருத்தி பெரும். கலப்புசரக்கைக் கலந்து கைகாட்டுவதும் மூச்சவுருண்டைகளை வித்து மோசஞ்செய்வதுமாகிய வஞ்சக வியாபாரிகளை அடக்கி தேசத்தை சீர்படுத்த கருணைதங்கிய பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்களே அதனதன் மேற்பார்வைக்கு சீர்த்திருத்தக்காரர்களாகத் தோன்றுவார்களாயின் தேசமும், வியாபாரமும், சீர்பெறும். ஏழைகளும் சுகம் பெறுவார்கள். அங்ஙனமின்றி வஞ்சகக் கூற்றரை அடக்கற்கு வஞ்சகக் கூற்றர்களையே நியமிப்பதாயின் உள்ள வியாபாரமுங் கெட்டு ஊரும் பாழடைய வேண்டியதேயாம்.

- 6:6; சூலை 17, 1912 -


263. ஐரோப்பிய ஜர்ஜுகளும் மாஜிஸ்டிரேட்டுகளுந் தெண்டிப்பது அதிக தண்டனையென்று அலக்கழிக்கப்போமோ

ஆகாவாம். இந்துக்களென்போர் தங்கள் சட்டதிட்டங்களையும், ஐரோப்பியர் சட்டதிட்டங்களையும் உய்த்துணர்வார்களாயின் செவ்வனே விளங்கும். அங்ஙனம் உணராது பத்திரிகைகளில் வரைவது வீணேயாம். ரெயில் வண்டியில் கல்லெறிந்த பனிரண்டு வருடப் பிராயமுடையப் பையனை ஏழுவருடம் கலாசாலை தண்டனை விதித்தது கொடிது என்று கூறுவது விந்தையேயாம். 7 வருடகாலவரையில் அவன் புசிப்புக்கும் அவன் கற்கும் கல்விக்குங் கைத்தொழிலுக்கும் அவன் உடுக்கும் ஆடைக்கும் நேருஞ் செலவை நிதானிக்காது ஏழுவருடம் என்னுங் காலக்கணக்கை மட்டிலுங் கண்டு குறைக்கூற ஆகாவாம். அத்தகைய தண்டனையானது மற்றுமுள்ள துஷ்டப் பிள்ளைகளுக்கு பயமுண்டாகவும் ஏழுவருட தண்டனையடைந்த சிறுவன் கல்வியுங் கைத்தொழிலுங் கற்று நல்லொழுக்கத்தில் நிலைத்து சுகச்சீர் பெருவதற்கேயாம். அத்தகைய தண்டனையின் பயனானது இரயில் பிரயாணிகளுக்கும், உத்தியோகஸ்தர்களுக்குத் துன்பம் நேரிடாமலும், சிறுவர்களுக்கு துஷ்ட குணம் எடுபடவுமே யன்றி வேறன்றாம்.

ஓர் பிராமணன் திருடிவிட்டால் அப்பொருளுடன் அவனை ஊரைவிட்டகற்றி விடல் வேண்டும். மற்றசாதியான் திருடினால் அவனை தண்டிக்க வேண்டுமென்னும் அநீதியும், பிராமணன் ஆசனத்தில் மற்றொருவன் உழ்க்காருவானாயின் அவன் புட்டத்தை அறுத்துவிட வேண்டுமென்னுஞ் கொறூரச் செயலுமன்று. ஐரோப்பியர்களால் செய்துவரும் சட்டங்களும், செயல்களும் மக்களது சீர்திருத்தத்தைப் பொருந்தியே நிற்குமன்றி கெடுக்கமாட்டாது. பெரும்பாலும் அவர்களுடைய நோக்கம் மனித வகுப்போரை மனித வகுப்பாராகவும், மிருக வகுப்பை மிருகங்களாகவுங்கண்டு நடத்தும் மேன்மக்களேயாவர்.

அவர்கள் நடத்துஞ் செங்கோலோ தன்னவர் அன்னியரென்னும் பாரபட்சமற்றது. ஏழைகள் கனவான்கள் என்னும் நிறை குறையற்றது. அத்தகையோர் விதிக்குத் தண்டனைகளைக் குறைக் கூறுவோர் தங்களது குறைகளை நோக்காதவர்கள் என்றே கூறல் வேண்டும்.

அத்தகைய நீதிநெறியற்றக் குறைகளையும் ஏழைக்குடிகள் அடைந்து வருங் கஷ்டங்களையுங் கண்ணாறக் காணவேண்டுமாயின் இந்துக்களுக்குள் ஒரே சாதியார் பெருந்தொகையினராக வாசஞ்செய்யும் கோர்ட்டுகளிலும்