426 / அயோத்திதாசர் சிந்தனைகள்
விட்டபடியால் பொன்னின் கம்பியை இழுக்க இழுக்க நீளுவது போல அரிசியின் படியை நாளுக்கு நாள் குறைக்கக் குறைக்க லாபம் உண்டாவது கண்டு தம்மெய் ஒத்த நூறுகுடிகள் பசிபட்டினியால் பதைத்து ஏதுகேடுண்டேனுங் கெடட்டும் நாம் ஒருகுடி சுகமாக வாழ்ந்தால் போதும் என்னும் ஆனந்தத்திலிருக்கின்றார்கள். தானியம் மலிந்திருந்த காலத்தில் சரியான லாபம் வைத்து விற்றவர்கள் தானியங் குறைந்துள்ள காலத்திலும் அத்தகைய லாபம் வைத்து விற்பார்களாயின் குடிகள் கூச்சலிடமாட்டார்களே, தானியங் குறையக் குறைய லாபத்தை மேலும் மேலும் பெருக்குகின்றபடியால் அன்றோ ஏழைக் குடிகள் பரிதவிக்கின்றார்கள். இராஜாங்கத்தோர் பார்வையில் விற்றுவரும் உப்பு ஒன்று தவிற விறகேனும் சகாயத்தில் கிடைக்கின்றதா, மிளகாய், புளி, மசாலைகளேனும் சகாயத்திற் கிடைக்கின்றதா, மற்றும் சோளம், கேழ்வரகு, பயிறு தினுசுகளேனும் சகாயமாகக் கிடைக்கின்றதா, ஏதுங் கிடையாவே. இத்தியாதி குறைவில் அரிசியையும் அதிகக் குறைத்து அதிகலாபம் பெற எண்ணுவாராயின் ஏழைக்குடிகள் எவ்வகையில் சீவித்து எடுக்கும் வேலைகளை களைப்பும் ஆயாசமுமின்றி முடிக்க முயலுவார்கள். ஆகவே உழைக்கும் ஆட்களுக்கு உல்லாசமும், ஊக்கமுமிருந்தாலன்றோ ஊர்க்குடிகள் யாவரும் சுகச்சீர் பெறக்கூடும். “உழைப்பாளிகள் உறம் பெற்றுழைக்கின் பெருக்காளிகள் பெரும்பேர்பெறுவர்” என்னும் பழமொழியும் வீண்போமோ, இத்தியாதி, தானியங்கள் குறைவுபட்டுபோதற்கும், குடிகள் அல்லலடைவதற்கும் காரணம் கருணையும் அன்புங் கனவிலுமில்லா சோம்பேறிகள் பேராசையால் பெரும் பூமிகளை சுவாதீனப்படுத்திக்கொண்டு கலப்பைப் பிடித்தாற் கனங்குலையும் என்றும், மண்வெட்டி பிடித்தால் மானம் போமென்றும், சோம்பலையே மேலும் மேலும் பெருக்கிக்கொண்டு துட்டும் செலவாகக் கூடாது, உழவு மாடுகளும் செலவின்றி மேய்ந்து வந்துவிடவேண்டும், அதற்காக நாளொன்றுக்கு ஓரணாவுக்கு இரண்டாள் அகப்படுவானா எனப் பல்லிளித்துப் பார்த்திருப்பதினால் பூமியுங் கெட்டு பயிறுகளும் நசிந்து உழவு மாடுகளும் குறைந்து பூமிகளும் பாழடைந்து போகின்றது.
ஈதன்றி உழுது பயிரிடும் உழைப்பாளிகள் யாவரையுந் தங்களை ஒத்த மநுக்களென்று பாவிக்காமலும் அரைவயிறு கஞ்சேனும் சரிவரக்கொடுக்காது வாதிப்பதினாலும் சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாத சுகாதாரக்கேட்டினாலும் தென்னிந்திய உழைப்பாளிக் குடிகளில் பெரும்பாலோர் ஊரைவிட்டு ஓடியும் போனார்கள். மற்று மிகுத்துள்ள உழைப்பாளிகள் காலியாயுள்ள பூமிகளுக்கு விண்ணப்பங்கொடுப்பார்களாயின் சாதிகர்வ துவேஷத்தால் தாழ்ந்த சாதியான் பூமிகளைப் பெற்றுக்கொள்ளுவானாயின் தங்களை பெரியசாதிகளென்று மதிக்கமாட்டான் குறைந்த கூலிக்கு வந்து நமக்கு ஊழியமுஞ் செய்ய மாட்டான் என்னும் பொறாமெயால் தங்களை ஒத்த சாதிசம்மந்த உத்தியோகஸ்தர்களைக்கொண்டு அதற்கு அண்டை பாத்தியம் வேறு உண்டென்றும், அஃது மேய்க்கால் பூமியென்றும் ஏதேனும் ஒவ்வோர் தடைகளைச் சொல்லி ஒழித்து விட்டு தாங்களே தங்கள் பூமிகளை விருத்திபெறச் செய்துக் கொள்ளாமலும் செய்யும் உழைப்பாளிகளுக்குக் கொடுக்கவிடாமல் தடுத்து பாழ்படுத்தி வருகின்றார்கள்.
இத்தகையக் கேடுபாடுகளால் பூமிகளின் விருத்திக்கெட்டு ரூபாயிற்கு நாலுபடி அரிசிக்கு வந்துவிட்டது. சோம்பேறிகளே பூமிகளை மிக்க சேகரித்துக் கொண்டு பாழ்படுத்தி வருகின்றார்களென்பதற்குப் பகரமாக பூமிகளின் விருத்தியை நாடி கருணை தங்கிய ராஜாங்கத்தார் எவ்வளவோ முயற்சியும் பணவுதவிகளும் விதை முதலுதவிகளும் விவசாய போதனைகளும் செய்து வந்தும் அவைகள் யாவும் சரிவர விருத்திபெறாததற்குக் காரணம், அதிகபூமிகளைவைத்துள்ளோர் சோம்பலும் சாதி ஊழலுமேயாகும். பெரியசாதிகளென வேஷம் போட்டுள்ளவர்களே இப்பஞ்சத்திற்குக் காரணபீடமாயுள்ளதுமன்றி மண்டிக்கடைகளைவைத்துக்கொண்டு கருணையற்றச் செயலால் பெரும் லாபத்தை ஆசித்து ஏழை எளியோரை வாதித்து