பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

434 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஒருவன் எழுந்து கோவிந்தா, கோவிந்தாவென்றவுடன் அவ்விடமுள்ள நூறுபேரும் அதன் விவரமறியாது கோவிந்தா, கோவிந்தா வென்று பெருங்கூச்சலிடுவதுபோல இரண்டுபேர் சேர்ந்துக்கொண்டு சுயராட்சியம் சுயராட்சியம் என்றவுடன் உள்ளவர்கள் யாவரும் அதனுட்பொருளையும் அதன்செயலையுங் கருதாது தாங்களும் சுயராட்சியம், சுயராட்சியம் என்னவும் சுதேசிகள், சுதேசிகளென்று ஆர்பரிக்கவுமுள்ளச் செயல்களை அகற்றி தற்காலம் நம்மெ ஆண்டுவரும் பிரிட்டிஷ் துரைத்தனமே நீடிக்க வேண்டுமென்றும் அவர்களது வாழ்க்கையே சுகம்பெற வேண்டுமென்றும் அவர்கள் சுகவாழ்க்கைப் பெறுவார்களாயின் நாம் இன்னும் சுகவாழ்க்கையை அடையலாமென்றும் ஆர்ப்பரித்து இராஜ விசுவாசத்தில் நிலைப்பதே அழகாகும்.

- 6:21: அக்டோபர் 30, 1912 -


275. தேசம் எவ்வகையால் சிறப்படையும்

பெருங்கூட்டங்களாகக் கூடிக்கொண்டு சுயராட்சியம், வேண்டும், சுயராட்சியம் வேண்டும் என்றால் சிறப்படையுமா இல்லை. எல்லவரும் பி.எ., எம்.எ., படித்துக்கொள்ள வேண்டும் என்றால் சிறப்படையுமா இல்லை. எல்லவரும் பெரிய பெரிய உத்தியோகங்களைப் பெற்றுக்கொண்டால் சிறப்படையுமா இல்லை. எல்லவரும் பெரிய பெரிய பணக்காரனாகி அப்பணங்களை புதைத்து வைத்துக்கொண்டிருந்தால் சிறப்படையுமா இல்லை. எங்கள் மதமே பெரியமதம், எங்கள் சாமியே பெரிய சாமி என்று சொல்லித்திரிந்தால் சிறப்படையுமா இல்லை. சாமிகளுக்குக் கோவில்களைக் கட்டவேண்டும். பூஜைகளைச் செய்ய வேண்டுமென்றால் சிறப்படையுமாஇல்லை. கொட்டைகளைக் கழுத்தில் கட்டிக்கொள்ளவேண்டும், குறுக்குப்பூச்சுகளைப் பூசிக்கொள்ள வேண்டுமென்றால் சிறப்படையுமா இல்லை. நிலத்துளசிக்கட்டையை யணியவேண்டும், நெடுக்குப்பூச்சு பூசவேண்டுமென்னில் சிறப்படையுமா இல்லை. இரவெல்லாம் இராமாயணம், பகலெல்லாம் பாரதம், பெரியபுராணம் படிப்பதால் சிறப்படையுமா இல்லை. அரோகரா வென்னும் சப்தமிட்டுக் கொண்டும், கோவிந்தாவென்னுங் கூச்சலிட்டுக்கொண்டுந் திரிந்தால் சிறப்படையுமா இல்லை. நாங்களெல்லோரும் பெரியசாதிகள், அவர்களெல்லோரும் சிறிய சாதிகளென்று சொல்லித்திரிவதால் சிறப்படையுடமா இல்லை. அவனவன் சோம்பலேறி வீட்டில் உட்கார்ந்து சாமிகொடுப்பார், சாமிகொடுப்பாரென்றால் சிறப்படையுமா இல்லை. முக்காலுமில்லை. மற்று எவ்வகையால் சிறப்படையும் என்னிலோ மனிதனாகத்தோன்றினவன் நம்மெப்போல் ஒத்த தேகி எத்தேசத்தோன் ஆயினும் எப்பாஷையோன் ஆயினும், எவ்வருணத்தோன் ஆயினும், அவனையும் ஓர் மனிதனென்று உணர்ந்து அவன் தேசம் எத்தகைய சிறப்பிலிருக்கின்றது, அவன் தேசத்தோர் எவ்வகையா முயற்சியில் இருக்கின்றார்கள், அவ்வகை முயற்சியினால் என்ன சீரும் சுகமும் பெற்றிருக்கின்றார்கள், அவர்களில் பெண்களும் புருஷர்களும் தங்கள் தங்கள் தொழில் முயற்சியிலிருக்கின்றார்களா என்று விசாரிக்க முயல்வதே தேசத்தின் முதற் சிறப்பாகும்.

அவ்வகை விசாரித்துணர்ந்த புருஷன் தனக்குந் தம்மெ ஒத்த தேகிகளுக்கும் மற்றுமள்ள சீவராசிகளுக்கும் உணவாயிருந்து போஷிப்பதும் வளர்ப்பதும் உழைக்கத்தக்க வலுவைத் தருவது மாயப் பொருட்கள் புற்பூண்டுகளும் விருட்சங்களுமே என்று கண்டுணரல் வேண்டும். அவ்வகைக் கண்டுணர்ந்தோன் தனக்குரிய பூமி சொற்பமாயினும் அதனில் ஓர் தென்னை மரத்தையேனும், மாமரத்தையேனும், பலாமரத்தையேனும் ஒன்றை வைத்தே போஷித்தல் வேண்டும். மற்றுங் கிஞ்சித்து அதிகபூமி உள்ளவன் அப்பூமியை வெறுமனே விடாது அதிற் சொற்பக் கீரைவகைகளையேனும் விதைத்து தனக்கு உபயோகப்படுத்திக் கொள்ளுவதுடன் ஏனைய மக்களுக்கும் உதவும்படி செய்யல் வேண்டும். மற்றும் அதிகபூமிகளை உடையவன் தன் சோம்பலை அகற்றி, கரம்புபூமிகளிருப்பினும் அவற்றை நஞ்சைபூமிகளாக்கி, இந்த